Wednesday, November 13, 2013

இந்தி - ஆரியத்தின் வழித் தோன்றல்

இந்தி மொழியைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டுமானால் வட நாட்டில் மொழிகள் எவ்வாறு தோன்றின என்பதைப் பற்றி முதலில் விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். இந்திய நாட்டினுள் புகுந்த ஆரியர் எல்லோரும் ஒரே முறையிற் புகவில்லை அலை அலையாகப் பலமுறைகளில் புகுந்தார்கள். அவர்கள் எல்லோரும் ஒரேவகை மொழியைப் பேசவில்லை; ஆனால் அம்மொழிகள் எல்லாம் ஒரே இனத்தைச் சேர்ந்தனவாயிருந்தன. அம்மொழிகளுள் ஒன்றில் மாத்திரம் சமயப் பாடல்கள் செய்யப்பட்டன. இவை மிகக்கவனத்தோடு செவி வழக்கில் நீண்டகாலம் காப்பற்றப்பட்டு வந்தன. பிற்பாடு பிராமணர் இம்மொழிக்கு இலக்கணஞ் செய்து இதனைக் கடவுள் சம்பந்தமான புனித மொழியாகக் காப்பாற்றினர். ஆரியர் பிராகிருத மொழிகளைப் பேசினர். பிராகிருதமென்பது பொதுமக்கள் வழங்கிய இலக்கணவரம்பில்லாத கிராமியமொழி. அக்காலத்தில் கிராமிய மொழிகள் இருபத்திரண்டு வரையில் இருந்தன. அம்மொழிகள் அவையவை வழங்கிய இடங்களின் பெயரால் அறியப் பட்டன. புத்தசமய நூல்கள் மகதி (பாலி) என்னும் பிராகிருத மொழியிற் செய்யப்பட்டன. சைனநூல்கள் பெரி தும் மகாராட்டிர பிராகிருதத்தில் எழுதப்பட்டன.
ஆரியமக்கள் வட நாட்டில் நுழைந்தபோது, வடநாடு மனித சஞ்சாரமற்ற நாடாக இருக்கவில்லை. அங்கு திருத்தம் மிக்க மக்கள் வாழ்ந் தார்கள்; திருந்திய மொழியைப் பேசி னார்கள். அங்கு வாழ்ந்து கொண்டிருந்த பழைய மக்களுக்கும், புதிய மக்களுக்கும் கூட்டுறவு உண்டாயிற்று கலப்பு மணங்களும் நிகழ்ந்தன. ஆரியருக்குத் தம் கருத்துக்களை விளக்கும் இலகு நோக்கி, ஆரியச் சொற்கள் சிலவற்றைப் பழைய மக்கள் கையாண்டனர். பழைய மக் களுக்குத் தம் கருத்துக்களை விளங்கும் இலகு நோக்கி ஆரியர் பல இந்தியச் சொற்களைக் கையாண்டனர். இவ்வாறு இரு மக்களுக்குமிடையே மொழிக் கலப்போடு இரத்தக் கலப்பு முண்டா யிற்று. இரத்தத்ககலப்பினால் புதிய மக்கள் தோன்றினார்கள். கி.மு.ஆயிரம் வரை விந்தியமலைக்கு வடக்கேயுள்ள நாடுகள், ஆரியவர்த்தம் எனப்பட்டன.
கி.மு. 600 வரையில், பாரசீகர் பஞ் சாப்பை வென்றார்கள். அப்பொழுது சத்ரப்ஸ் என்னும் பாரசீகத்தலைவர்கள் பஞ்சாப்பை ஆண்டார்கள். அக்காலத் தில் பாரசீகர் பஞ்சாப்பில் குடியேறி னார்கள். அரசாங்க ஆவணங்களை எழுதுவதற்கு கரோஷ்தி என்னும் புதிய எழுத்து பாரசீகரால், வழங்கப்பட்டது. இது இன்றையப் பாரசீகம் போல இடப்பக்கமிருந்து வலப்பக்கம் எழுதப் படுவது அக்காலத்தில் வடநாட்டில் பாரசீக மொழிக் கலப்பு இரத்தக் கலப்புகள் தோன்றின.
நாலாம் நூற்றாண்டின் பிற்பகுதி யில் கிரேக்கர் இந்தியா மீது படை எடுத்தார்கள். வட இந்தியாவின் சில பகுதிகள் கிரேக்கர் ஆட்சிக்குட்பட் டிருந்தன. கிரேக்கர் பலர் வட நாட்டில் தங்கி வாழ்ந்தனர். அதனால் இரு ஜாதியாருக்குமிடையில் மொழிக் கலப்பும் இரத்தக் கலப்பு முண்டாயின. மவுரிய சந்திரகுப்த அரசன் கிரேக்க பெண்ணை மணந்திருந்தான். சில காலத்திற்குப் பின் பாரசீகத்தில் வாழ்ந்த கிரேக்கர், வடநாட்டின் சில பகுதிகளை வென்று ஆட்சி நடத்தினர். அக்காலத்தில் மிகப்பல கிரேக்கர் வட இந்தியாவில் குடியேறி வட நாட்டு  மக்களோடு கலந்தார்கள்; இந்து மதத்தைக் கைக்கொண்டார்கள்; இந்தியப் பெயர்களையும் தமக்கு இட்டு வழங்கினார்கள். இக்காலத்தில் பிராகிருதமும், கிரேக்கமும் கலந்த ஒருவகை மொழியும் வடநாட்டில் வழங்கிற்று. வட நாட்டில் குடியேறிய கிரேக்கர் கிரேக்க நாட்டுக்கோ, பாரசீகத்துக்கோ செல்லவில்லை; இந்திய மக்களோடு கலந்து மறைந்து போனார்கள். பின்பு சகர் எனப்பட்ட சித்திய மக்கள் இந்தியா மீது படை எடுத்தார்கள். இவர்கள் வட நாட் டையும் தென்னாட்டின் சில பகுதி களையும் வென்று சில காலம் ஆட்சி புரிந்தார்கள். அக்காலத்தில் சித்திய மக்கள் பலர், வட நாட்டிலும் விந்தியத் திற்குத் தெற்கிலும் குடியேறினார்கள். இவர்களும் இந்து மதத்தைத் தழுவி இந் தியப்பழக்க வழக்கங்களை மேற் கொண்டு இந்தியராக வாழ்ந்தார்கள், இவர்கள் மொழிக்கலப்பும் இரத்தக் கலப்பும் வட நாட்டில் உண்டாயின. சகர் அரசர் ஆவணங்கள் தீட்டுவதற்குக் கிரேக்க எழுத்துக்களையே பயன்படுத் தினார்கள். ஒரு வகைக் கிராமிய கிரேக்க மொழியே அரசாங்க மொழி யாகவும் இருந்தது. பின்பு மங்கோலிய ஜாதியினர் வட இந்தியா மீது படை எடுத்து, வட இந்தியாவையும் விந்தியத் திற்குத் தெற்கிலுள்ள சில நாடுகளை யும் ஆட்சி புரிந்தனர். அக்காலத்தில் மங்கோலியரில் பலர் இந்தியாவிற் குடியேறினர். அக்காலத்தில் மங்கோலிய இரத்தக்கலப்பும், மொழிக்கலப்பும், வட நாட்டில் உண்டாயிற்று. பின்பு அவுணர் என்னும் மத்திய ஆசிய முரட்டு மக்கள் வட நாட்டை வெற்றி கொண்டனர். அப்பொழுது அவுணர் மொழிக்கலப்பும் இரத்தக்கலப்பும் வட நாட்டில் உண்டாயிற்று. பின்பு அரபுக்கள் இந்தியாவை வென்றார்கள். அக்காலத்தில் அரபுக்களும், பாரசீகரும், துலுக்கரும் வட நாட்டில் குடியேறினர். அதனால் அரபு, பாரசீக, துலுக்கு, இரத் தக்கலப்பும், மொழிக்கலப்பும் உண் டாயின. இவ்வாறு வட நாட்டில் மிக மிக முற்காலம் முதல் ஜாதிக்கலப்பு, மொழிக் கலப்புக்கள் உண்டாயிருந்து வருகின்றன.
- ந.சி.கந்தையா பிள்ளை (நூல்: திராவிட மொழிகளும் இந்தியும்)

No comments:

Post a Comment