திருச்சியில் கூடிய
திராவிடர் கழக
மத்திய
நிருவாகக் குழுக்
கூட்டத்தில் அரசியல் சட்டத்தை எரிப்பது எனும்
பிரச்சினை வந்தபோது, பெரும்பான்மை யான
உறுப்பினர்கள் இந்தத்
தீர்மானம் மத்திய
நிருவாகக் குழுவில் மேற்
கொள்வதை விட,
இதற்காகத் தனி
ஒரு
மாநாடு
கூட்டி
அதில்
இதை
மக்களுக்கு எடுத்துச் சொல்லி
மக்கள்
ஆதரவு
பெற்று,
அதன்
பின்
சிறிது
நாள்
தவணை
கொடுத்து, பிரசாரம் செய்து
நடைமுறைப் படுத்தலாம் எனக்
கருத்துக் கூறினர். பெரியார் டிசம்பர் 1957இல்
வைத்துக் கொள்ளலாம் என்று
கூறினார். இந்த
நிலையில் பெரியாரின் பிறந்த
நாள்
விழாவைத் தனிச்
சிறப்பாக நடத்தக் கருதி
அவருடைய எடைக்கு எடை
வெள்ளி
வழங்குவது என
முடிவு
செய்தனர். இவ்விழாவிற்கு எல்லா
மாவட்டங்களி லிருந்தும் தமிழ்
மக்கள்
பெருவாரியாக வருவார்கள் என்று
தோன்றியது. எனவே
பெரியார் தனி
மாநாட்டை எடைக்கு எடை
வெள்ளி
வழங்கும் விழாவிலேயே வைத்துக் கொண்டால் இரண்டு
வித
நன்மை
- அதாவது
செலவும், தொந்தர
வும்
இருக்காது; அனைவரும் தங்கள்
கருத்தை அறிவிக்க ஒரு
வாய்ப்பு இருக்
கும்
என்று
கருதி
விழாவை
யொட்டியே தனி
மாநாடு.
மிகவும் நெருக்கத்தில்
20.10.1957 இல்
பத்து
நாட்களில் தொடங்
கப்பட்டது. எனவே
தஞ்சையைத் தேர்ந்
தெடுத்தனர். மாநாடு
3.11.1957 இல்
எடைக்கு எடை
வெள்ளி
நாணயம்
வழங்
கிய
மாநாடு.
இம்மாநாடு கண்டுபெரியார் அய்யாவே பூரித்து எழுதிய
வார்த்தைக் கோவைகள் இவை.
எதைச் சொல்கிறேனோ எதை
எதிர்பார்க்கிறேனோ அதைத்
தமிழ்நாடு பூராவும் பகுதி
(பாதி)
செய்கிறது என்றால் தஞ்சை
மாத்திரம் பகுதிக்குக் குறையாமல் செய்யும். திராவிடர் கழகம்
ஆரம்பித்து 10,15 ஆண்டுகளில் ஆதரவளித்துப் பல
கட்சிகள் நாட்டில் இருந்த
போதிலும் திராவிடர் கழகத்தினர் தலை
சிறந்த,
கட்டுப்பாடான, நாணயமான, எந்த
வித
சுயநலமில்லாத, வயிற்றுப் பிழைப்புக்காக அல்லாமல் எந்த
விதத்
தியாகத்திற்கும் முன்
வந்து
பாடுபடுகிறவர்கள் என்று
சொல்லும்படியான நல்ல
பெயரைப் புகழைத் தஞ்சை
வாங்கிக் கொடுத்
துள்ளது.
எனது 40 ஆண்டுப் பொது
வாழ்க்
கையில்
எத்தனை
மாநாடுகள் நடந்திருக் கின்றன.
தலைமை
வகித்திருக்கிறேன். சுயமரியாதை இயக்கக் காலம்
முதல்
சிறப்பாக முதல்
மாநாடு
செங்கற்பட்டில் நடந்தது. அதுதான் ரிக்கார்டு (மிகப்
பெரிய
பதிவுக்குரிய மாநாடு)
ஜமீன்
தார்கள் 60-65 பேர் வந்திருந்தார்கள். எல்லா
சட்டசபை உறுப்பினர்களும் வந்தி
ருந்தார்கள். நல்ல
கூட்டம். இருந்தாலும் இதில்
அரை
பங்குக்கும் குறைவான அளவுதான் இருக்கும். அதற்குப் பிறகு
பல
மாநாடுகள் நடந்திருந்தாலும், இந்த
மாநாட்டைத் தொடும்படியான அளவுக்குக் கூட
நடந்ததில்லை. இன்று
திராவிடர் கழகத்
தனி
மாநாடு
என்பதாகக் கூட்டியுள்ளோம். என்
கணக்குத் தவறாக
இருந்தாலும் இருக்கலாம். இது
சிறப்பான மாநாடு.
ஆதரவான
மாநாடு.
நான் பெருமையாகச் சொல்ல
வில்லை.
எங்குக் கூட்டம் குறைவாக இருந்தால் கூட்டம் இல்லை
என்று
சொல்லுவதுதான் என்
வழக்கம். நானும்
நண்பர்களும், தொண்டர்களும் மகிழ்ச் சியுடன் பேசிக்
கொண்டிருந்தோம். காலை
ஊர்வலம் எல்லோரையும் மயக்கிவிட்டது. ஒருவர்
நாலு
லட்சம்
என்கிறார். உள்ள
படியே
கணக்குப் பார்த்தால் எவ்வளவு இருக்கும் என்று
தெரியாது. இந்த
மாநாடு
மகிழ்ச்சிக்குரியதும் பெருமைப் படத்தக்கது மான
மாநாடாகும்.
இவ்வாறெல்லாம் சொன்ன
அய்யா,
இந்த
மாநாட்டின் பலன்
வெற்றி
என்று
எதைக்
குறிப்பிட்டார் என்று
கூறுவதுதான் சிறப்பாக இருக்கும்.
என்னைக் கேட்டால் நான்
சொல்லு
கிறேன்.
திராவிடர் கழகத்
தனி
மாநாடு
என்று
சொல்லப்பட்டாலும் உங்கள்
தலைவனுக்கு முக்கிய தொண்டர்களுக்கு ஜெயிலுக்குச் செல்ல
வழியனுப்பு மாநாடு
தான்
இந்த
மாநாடு.
அரசியல் சுற்றுச் சார்பு
சூழ்நிலை அப்படித்தான் உள்ளது.
கூடிய
விரைவில் அரசாங்க விருந்து இருக்கிறது. அது
இலேசில் கிடைக்கக் கூடியதல்ல. முன்பெல்லாம் சாதாரணம். ஆனால்
அது
இப்போது எளிதில் கிடைப்
பதாக
இல்லை.
இம்மாநாடு தன்னைச் சிறையனுப்பும் மாநாடு
என்று
பூரிப்பும், உற்சாகமும், மகிழ்ச்சியும் கலந்து
கூறிய
ஒரே
தலைவர்
பெரியாராகத்தான் இருப்பார். அதே
நேரத்தில் என்ன
இலட்சியத்திற்காக இந்தப்
போராட்டம் என்பதையும் வலி
யுறுத்துகிறார்.
இன்றைய லட்சியம், முயற்சியை நீங்கள் தெரிந்து கொள்ள
வேண்டும். ஜாதி
ஒழிய
வேண்டும் என்பது
ஒரு
சாதா
ரண
சங்கதி.
ஆனால்
அது
பிரமாதமான செயலாகக் காணப்படுகிறது. பிறவியில் யாவரும் தாழ்ந்தவர்கள் அல்ல.
எங்
களுக்கு மேல்
எவனும்
இல்லை.
எல்லோ
ரும்
சமம்
என்ற
நிலை
நமக்குத்தான் அவசியமாகத் தோன்றுகிறது.
பெரியாரின் இந்த
வினா
நியாயமான வினா.
நெஞ்சை
உறுத்திக் கொண்டிருந்த நேர்மையான வினா.
ஒருவன்
மேல்
ஜாதி;
ஒருவன்
கீழ்
ஜாதி;
ஒருவன்
பாடுபட்டே சாப்பிட வேண்டும்; ஒருவன்
பாடுபடாமல் உட்கார்ந்து கொண்டே
சாப்பிட வேண்
டும்
என்கிற
பிரிவுகள் அப்படியே இருக்க
வேண்டுமா? தீண்டாமை ஒழிய
வேண்டு
மென்பது சாஸ்திரத்திற்கு, ஆகமத்
திற்கு
விரோதம்தான். ஆனால்
தீண்
டாமையை
ஒழிக்க
வேண்டும் என்பது
அரசியல் சூதாட்டத்திற்கு ஆக
அவசிய
மாக
இருந்தது. செய்தார்கள். அது
போல
இதற்கு
ஏன்
பரிகாரம் செய்யக்கூடாது.
ஒரு மனிதன்,
தான்
ஏன்
பிறவியில் தாழ்ந்தவன் என்று
கேட்கக்கூடாது. கேட்க
உரிமையில்லையென்றால் இது
என்ன
சுயராஜ்ஜியம்?
நான் ஏன்
சூத்திரன்? நான்
ஏன்
வைப்பாட்டி மகன்,
நான்
ஏன்
கீழ்
ஜாதி?
இதற்குப் பரிகாரம் வேண்டும் என்றால் குத்துகிறேன் என்றான் வெட்டுகிறேன் என்றான் குத்தாமல் வெட்டாமல் இருக்
கிறதுதானே தப்பு
என்றுதானே எண்ண
வேண்டியுள்ளது?
பெரியார் அக்கிரகாரத்தைக் கொளுத்தி 1000 பார்ப்பனர்களையாவது வீழ்த்தினால்தான் ஜாதி
ஒழியுமென்றால் அவ்வாறே கொளுத்துவோம், அவ்வாறே வீழ்த்துவோம் என்றும் சற்றுக் கடுமை
யாகக்
கூறி
மிரட்டினார்.
எனவே திருச்சியில் பெரியாரைக் கைது
செய்து
117,323,324, 326, 436, 302 ஆகிய ஆறு
பிரிவுகளில் வழக்கு
பதிவு
செய்தனர். பின்னர் விடுவித்தனர்.
9-11-1957
இல்
பெரியார் வெளியிட்ட அறிக்கையில் ஜாதியை
ஒழிப்பதற்காகப் போராடினேன்! மறியல்
செய்தேன்! சிறை
சென்றேன்! சர்க்கார்கள் விழிக்க வில்லை.
ஆகவே
ஜாதிக்கு ஆதாரமான சட்டத்தைக் கிழித்து தீயிலிட்டாவது இந்திய
சர்க்காரின் மனதை
மாற்றலாமா என்று
கருதி
அதைச்
செய்தேன். இதில்
எந்த
உயிருக்கேனும் சேதமுண்டா? இதற்காக எனக்கு
மூன்றாண்டு சிறைத்
தண்டனை
என்றால் இதை
நான்
மகிழ்ச்சி யுடன்
வரவேற்க வேண்டாமா? ஜாதியை
ஒழிப்பதற்கு மூன்றாண்டு சிறை
வாசம்
செய்தவன் என்பதை
விடப்
பெரும்
பேறு,
முக்கியக் கடமை
வேறென்ன இருக்
கிறது?
இந்த
விதமாக
நீங்கள் ஒவ்
வொருவரும் உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்.
11.11.1957
அறிக்கையில் கழகத்
தோழர்களே! தீவிர
லட்சியவாதிகளே! நீங்கள் மூன்று
ஆண்டு
தண்டனைக்குப் பயந்துவிட வேண்டியதில்லை. பயந்துவிட மாட்டீர்கள். சட்டத்தைப் பார்த்து பயந்து
விட்டதாகப் பேர்
வாங்காதீர்கள். ஆகவே
இஷ்டப்பட்டவர்கள் தஞ்சை
மாநாட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றப் பெயர்
கொடுங்கள்.
26.11.1957
சட்ட
எரிப்பு நாள்
என்று
அறிவித்தபின் தொடர்ந்து சொற்பொழிவு கள்
மேற்கொண்டு அய்யா
ஆதரவு
திரட்டினார். அறிக்கை வெளியிட்டார்.
10-11-1957
இல்
சென்னை
எழும்பூரில் சொற்பொழிவு நிகழ்த்திய பெரியார் தம்
சொற்பொழிவில் அரசியலமைப்புச் சட்ட
நகலை
எரிப்பதைக் கூட
நெறிப்படி செய்ய
வலியுறுத்தினார்.
காலணாவுக்கு அரசமைப்புச் சட்டத்
தின்
தொகுப்புக்குக் கிடைக்கும். அதை
வாங்கி
வைத்து
நெருப்புக் குச்சியைக் கிழித்து வைத்துக் கொளுத்த வேண்டும். 3 வருடமோ
6 வருடமோ
நீங்கள் தண்
டனையைப் பற்றி
ஏன்
கவலைப்படுகிறீர் கள்?
இது
கடமை,
செய்ய
வேண்டியது. அவ்வளவுதான். தாய்மார்களும் பெருமள
வில்
கலந்து
கொள்ள
வேண்டும். ஜோடி
ஜோடியாகக் கொளுத்துங்கள். அங்கே
போய்
குடும்பம் நடத்தினால் போகிறது; 26 ஆம்
தேதி
வரையில் வெளியில் இருந்தால் என்
பங்குக்கு நானும்
கொளுத்துவேன்.
15
ஆம்
தேதியே
என்னை
உள்ளே
போட்டாலும் போடலாம். ஏனென்றால் எனக்குப் போட்டிருக்கும் செக்ஷன் களுக்கு என்னை
ஜாமீனில் விடமுடி யாது.
ஆகவே
அன்றே
கைது
செய்து
வழக்குக்கு கொண்டுபோய் ஆஜர்படுத்த லாம்.
ஆனதால்
போராட்டத்தில் கலந்து
கொள்பவர்கள் போலீஸ்காரரிடமோ, அதிகாரிகளிடமோ முரண்பட்டு நடந்து
கொள்ளாமல் காரியம் செய்ய
வேண்டும். கட்டுப்பாடாக நடந்து
கொள்ள
வேண்டும். அதுதான் நமக்குப் பெருமை.
கலவர
மில்லாமல் ராமன்
படம்
எரித்த
மாதிரி
அவ்வளவு கட்டுப்பாடாக நடந்து
கொள்ள
வேண்டும்.
ஆண், பெண்
எல்லோரும் கொளுத்த வேண்டும். போலீஸ்காரர்கள் முன்
கூட்டியே மிரட்டுவார்கள். நடக்காமல் செய்யத் தந்திரம் செய்வார்கள். ஜாக்
கிரதையாக நடந்து
கொள்ளவேண்டும். தப்பித்துக் கொள்வேன் என்று
எதிர்
பார்த்து எதையும் செய்யக் கூடாது.
வீட்டிலிருந்து கொளுத்தினாலும் போதும்.
கொளுத்திக் கையில்
பிடித்துக் கொண்டு
போலீசின் எதிரில் நில்லுங்கள். கைது
செய்திருக்கிறேன் என்றதும் பேசாமல் போய்விடுங்கள். அரசமைப்புச் சட்டம்
கொளுத்தும் காரியத்துக்காக இத்தனை
பேர்
கைதாகி
இருக்கிறார்கள் என்ற
கணக்கு
போதும்.
மூன்று
வருடம்
போடட்டும். குடும்பத்தோடு இருக்கலாம்.
16.11.1957
இல்
விடுதலையில் சட்டத்தைக் கொளுத்துங்கள் சாம்பலை மந்திரிக்கு அனுப்புங்கள் என்று
அறிக்கை வெளியிட்டார். 17.11.1957இல் வெளியிட்ட அறிக்கையில் இந்திய
அரசமைப்புச் சட்டம்
ஏன்
எரிக்கப் படவேண்டும்? என்பதைச் சட்ட
நிபுணரைவிடவும் சிறப்பாகப் பெரியார் விளக்கினார். இறுதியாக, இந்தச்
சட்டத்தில் இந்து
மதத்துக்குப் பாதுகாப்பு அறிவிக்கப்பட்டி ருக்கிறது. இந்து
மதத்தில் ஜாதிக்குப் பாதுகாப்பு இருக்கிறது. ஜாதியை
ஒழிப்
பதற்கு
இதில்
இடமில்லை. ஜாதியைக் காப்பாற்றத்தான் இடமிருக்கிறது. இதை
எளிதில் திருத்தியமைக்க ஜாதி
ஒழிப்புக் காரருக்கு வசதியில்லை, வாய்ப்புமில்லை.
கடலூரில் 17.11.1957 இல் மஞ்சகுப்பத் தில்
சொற்பொழிவாற்றுகையில் என்றென் றும்
சூத்திரனாக இருப்பதை விட
மானக்
கேடு
வேறு
என்ன
என்று
கேட்டவர். தஞ்சாவூர் மாநாட்டில் தீர்மானம் போட்டுக் காலக்கெடு கொடுத்து அதுவும் தீர்ந்து விட்ட
நிலையில், ஜாதிக்குப் பாதுகாப்பு சட்டத்தில் இல்லை
என்று
விளக்கம் கொடுக்கவோ அல்லது
சட்டத்தைத் திருத்
துகிறேன் என்று
சொல்லாமல் சட்டத்தைக் கொளுத்தினால் 3 ஆண்டு
சிறை
என்று
சட்டம்
கொண்டு
வந்து
விட்டனர்.
எனவே பெரியார் அடக்கு
முறைச்
சட்டம்
செய்த
பிறகு
நாம்
சும்மா
இருந்தால் வெளியில் தலைகாட்ட முடியுமா என்று
கேட்டு
இந்த
நிலையில் குடும்பத்துக்கு ஒருவர்
சிறைக்குப் போக
நாம்
துணிந்து விட
வேண்டியது தானே!
மூன்று
வருடமோ
அது
மூன்று
நிமிடம் என்றால் தானே
நான்
மனிதன்
என்று
கேட்டு
நவம்பர் 26 ஆம்
நாளன்று ஆயிரக்கணக்கில் இரகசியமாயில்லாது பகிரங்கமாகக் கொளுத்த வேண்டும். அதைக்
கொளுத்தி விட்டுப் பெயர்
கேட்டால் சந்தோசமாகக் கொடுங்கள். கோர்ட்டுக்கு அழைத்துக் கொண்டு
போனால்
செல்லுங்கள் என்றும் கூறினார்.
எங்களுடைய பிள்ளை
குட்டிகளா வது
சூத்திரத் தன்மையிலிருந்து விடுபட்டே ஆகவேண்டும். அதற்காக எந்த
விலையையும் கொடுக்கவும் நாங்கள் தயார்
என்பதை
26 ஆம்
தேதியன்று நிரூபித்துக் காட்டுங்கள் என்று
அறைகூவலுடன் முடித்தார்.
நவம்பர் 26ஆம் தேதி அரசமைப்புச் சட்ட எரிப்புக் கிளர்ச்சியில் ஈடுபட்டுக் கைது ஆனவர்கள் நீதிமன்றத்தில் கூறவேண்டிய பட்டய வாக்குமூலம் இது 23.11.1957 விடுதலையில் வெளிவந்தது.
நான் ஜாதி ஒழிப்புக் கிளர்ச்சிக் காரன். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதிக்கும், அதை உண்டாக்கிய மதத் துக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக் கிறது. அரசமைப்புச் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப்படவும் இல்லை; அச்சட்டத்தைத் திருத்தக் கூடிய வசதி தமிழர்களுக்கு இல்லை.
ஆதலால் என் எதிர்ப்பைக் காட்டிக் கொள்ளும் அறிகுறியாக இச்சட்டத்தைக் கொளுத்தினேன். இப்படிக் கொளுத்து வதற்கு எனக்கு உரிமையுண்டு. இதனால் எந்த உயிருக்கும் எந்தப் பொருளுக்கும் சேதமில்லை. ஆதலால் நான் குற்ற வாளியல்ல. இந்த நீதிமன்ற நடவடிக் கையில் நான் கலந்து கொள்ள விரும் பவில்லை. நான் எதிர் வழக்காட விரும்ப வில்லை. நான் குற்றவாளி என்று கருதப் பட்டால் அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளத் தயாராகயிருக்கிறேன்.
(விடுதலை 23.11.1957)

பெரியார் போராட்ட நாளுக்கு முன்
வேண்டுகோள் ஒன்றினை விடுத்தார். ஒரு
சமூக
சீர்திருத்த இயக்கத் தலைவன்,
பொறுப்பான ஒரு
தலைவன்
எப்படி
இருக்க
வேண்டும் என்பதைக் காட்டும் வேண்டுகோள் எப்படிப்பட்ட உயர்ந்த நாணயமான, பண்புமிக்க தலைவர்
தந்தை
பெரியார் என்பது
போராட்டக் களத்திலும் வெளிப்படுகிறது.
முக்கியமான காரியம் ஒன்றை வணக்கமான வேண்டுகோளாகத் தெரிவித்துக் கொள்கிறேன். அதை அவசியம் ஒவ்வொருவரும் கவனிக்க வேண்டியது என்னை ரிமாண்டு செய்வதனாலேயோ, மற்றும் இப்போது செஷன்சில் நடைபெறும் வழக்கின் பெயரால் என்னை நீண்ட நாள் அரசாங்கத்தார் தண்டனைக்குள்ளாக்கி விடுவதாலேயோ, பொதுமக்கள் யாரும் ஆத்திரப்படுவதற்கோ, நிலை குலைந்து விடுவதற்கோ ஆளாகாமல் மிக்க மகிழ்ச்சியோடு அச்சேதியை வரவேற்க வேண்டும்.
எந்தவிதமான கலவரமோ, பலாத்காரமோ பார்ப்பன சமுதா யத்தைச் சேர்ந்த ஆண்களுக்கோ பெண்களுக்கோ, குழந்தைக ளுக்கோ, துன்பம் வேதனை உண்டாக்கக் கூடியதான செய்கை, அதாவது ஆயுதப் பிரயோகமோ, அடிதடியோ, நெருப்புக் கொளுத் துதலோ முதலிய ஒரு சிறிய காரியம் கூட நடத்தாமலும், நடை பெறாமலும் இருக்கும்படியாக ஒவ்வொருவரும் நடந்து கொள்ள வேண்டும். நான் ஆயுதப் பிரயோ கம் செய்ய வேண்டும் என்றும், அக்கிரகாரங்கள் கொளுத்தப்பட வேண்டும் என்றும் சொன்னதும் சொல்லி வருவதும் உண்மை. அவை இப்போது அல்ல. அதற் கான காலம் இன்னும் வரவில்லை. வரக் கூடாதென்றே ஆசைப்படு கிறேன்.
அப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபடு வதற்குக் காலம் எப்போது வரும் என்றால் அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்துவது முதலிய இன்னும் நான்கைந்து கட்டங் கள் நடத்தி அவைகளால் ஒன்றும் பயனில்லை; வெற்றிக்கு அவை பயன் படவில்லை என்று கண்டு பலாத் காரத்தைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்த பிறகுதான் நாம் அவற்றில் இறங்கவேண்டியவர்களாக இருக்கிறோம்.
நான் மேலே வேண்டிக் கொண் டிருக்கிறபடி, எந்த விதமான கலவரமும், செய்கையும் ஏற்படாமல் இருக்க வேண்டிக் கொள்கிறேன். அதிகாரிகளி டத்தில், போலீஸ்காரர்களிடத்தில் மரியாதையாகவும், கட்டுப்பாடாகவும் நடந்து கொள்ள வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன் என்று வேண்டுகோளுடன் முடித்திருந்தார்.
இந்தியத் தலைமை அமைச்சர் நேரு டில்லியில், திராவிடர் கழகக் கிளர்ச்சி காட்டுமிராண்டித்தனம். அநாகரிகமான காரியம்; இதை ஒழிக்காமல், அடக்காமல் இடம் கொடுத்துக் கொண்டிருக் கிறார்கள் என்று பேசினார். தமிழக அமைச்சரவை மந்திரி ஒருவர், பெரியார் திராவிடர் கழகத்திற்குக் கருமாதி செய் கிறார். ஏனென்றால் அவருக்குப் பிறகு கருப்புச் சட்டைக்காரர்கள் இருப்பதில் அவருக்கு இஷ்டமில்லை என்றார்.
பிரதமர் பண்டித நேருவுக்கும், பண் பாடில்லாமல் பேசிய தமிழக அமைச் சருக்கும் தக்க பதிலை, தரமான பதிலை 28.11.1957 அன்று திருச்சி நகர்மன்றத் திடலில் நடைபெற்ற கூட்டத்தின் வாயிலாக தந்தை பெரியார் அளித்தார்.
மான உணர்ச்சியைப் பற்றிச் சொல்லிப் பரிகாரம் கேட்டால் கருமாதி செய்கிறேன் என்று பதில் சொன்னால் கழகத்திற்குக் கருமாதி நடக்கிறதோடு வேறு சிலருக்கும் சேர்த்து கருமாதி நடந்துவிட்டுப் போகட்டும் என்றுதானே பதில் சொல்லவேண்டும்?
கொடி கொளுத்துகிறேன் என்ற போது பறந்து கொண்டு சமாதானம் சொன்னார்கள்; ஏன் அப்போது சட்ட மில்லை. இப்போது சட்டம் வந்துவிட்டது. ஒரு கை பார்க்கிறேன் என்பதுதானா மேலிடத்துப் பதில்? காட்டுமிராண்டித் தனம் என்பதுதானே மேலிடத்துப் பரிசு.
(விடுதலை 29.11.1957)
அழுத்தப்பட்டுக் கிடக்கும் சமுதாயம் தலையெடுப்பது பெரிதா? இல்லை எனக்குக் கழகம்தான் பெரியதா? கழகம்தான் எங்களுக்கு எல்லாம் கஞ்சி ஊற்றுகிறதா? உப்புக்கு வழியிருக்கிறதா என்று பார்ப்பவனுக்குக் கழகத்தில் இடமில்லை. அவனவன் சொந்தத்தில் சோறு தின்றுவிட்டுப் பாடுபடுகிறவன் கழகத்தின் மூலம் எந்தப் பதவிக்கு ஆசைப்படுகிறோம்? அது ஒழிவதால் எதற்குக் கவலைப்படப் போகிறோம்.
(விடுதலை 29.11.1957)
26.11.1957 இல் பெரியார் அறிவித்தபடி போராட்டம் நடைபெற்றது. அரசு என்ன செய்தது?
உண்மையில் பலமான முறையில் கிளர்ச்சி நடந்தது. போலீஸ்காரர்கள் இனிமேல் எங்களால் பிடிக்க முடியாது. சிறையில் இடமில்லை என்கிற அளவுக்கு நடந்துள்ளது.
இன்று கைதானவர்கள் பட்டியல் 3000 என்று போட்டிருக்கிறார்கள். அதுவும் தப்பு. சரியான விவரம் கிடைக்கவில்லை. கொளுத்தப் போகிறோம் என்று அறி வித்திருந்த சில இடங்களுக்கும் போலீசே போய் எட்டிப் பார்க்கவில்லை. லால்குடி மாதிரி இடங்களில் பாதிப் பேரைக் கூடப் பிடிக்கவில்லை.
அதற்கே அங்கிருந்த லாரியில் அள்ளிப் போட்டுக் கொண்டு திருச்சி சிறையதிகாரி இங்கு இடமில்லை என்று திருப்பி அனுப்பி மீண்டும் லால் குடிக்குக் கொண்டு போய்த் திரும்ப இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று செய்தி வரவே திரும்பத் திருச்சிக்குக் கொண்டு வந்து இப்படிப் பந்து விளையாடி யிருக்கிறார்கள். சட்டம் கொளுத்துவோர் பட்டியல் விடுதலை ஏட்டில் நாள்தோறும் வெளி யிடப்பட்டு அதன் எண்ணிக்கை 10 ஆயிரமாகப் பெருகியது. 26.11.1957 ஆம் நாள் மட்டும் மூவாயிரம் பேர் கைதாயினர். 15பேர் சிறைக் கொடுமையில் மாண்டனர். ஜாதியை ஒழிக்கப் போராடியவர்களை இழித்துக் கூறியது போராட்டத்தைப் பெரியார் இன்னும் தீவிரமாக்கத் துணை புரிந்தது எப்படி?
வருத்தத்தோடு சொல்கிறேன். அர சாங்கத்திற்கு எச்சரிக்கை செய்கிறேன். அடக்குமுறையை நம்பாதீர்கள். ஒரு காற்றில் அடித்துக்கொண்டு போய்விடும். இந்தக் கிளர்ச்சி அடிக்க அடிக்கப் பந்து போல் கிளம்புமே தவிர அடங்காது. இது எங்கள் காரியம் அல்ல! எனக்கு மாத்திரம் ஆகக் கூடயதல்ல! அத்துணை பேருக்கும் சம்பந்தமான காரியம்! அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, பறை யன், பஞ்சமனாக இருக்கிற ஒரு நேஷன் இந்த இழிவு கூடாது என்றால், வடவர்கள் நேஷனுக்கு அவமானம் என்கிறார்களே! இது என்ன நியாயம்?
இப்படித்தான் இருக்க வேண்டும் என்றால் எத்தனை பேர் மானத்தை விட்டு இருப்பான்? இன்று 3000 பேர் ஜெயிலில் இருக்கிறார்கள் என்றால் இதை நான் பெரிதாகக் கருத வில்லை. நாடகம் போன்றது என்றுதான் சொல்லுவேன். தோழர் குருசாமி இதுவரை 9 தடவை ஜெயிலுக்குப் போயிருக்கிறார். நான் போவதாயின் 16ஆவது முறையாக லாம். இந்த அடக்கு முறைகளை நாங்களா பொருட்படுத்துவோம்? இந்த பூச்சாண்டி யாரிடம்? இந்தக் காரியத்திற்கு 500 பேராவது சாகவும் முன்வரவேண்டும். சிறைக்குப் போவதில் ஒன்றுமில்லை என்றார் பெரியார்.