Thursday, December 26, 2013

இன்று அன்னை மீனாம்பாள் பிறந்த தினம்!

தோழர் ஈ.வெ.ரா.இராமசாமிக்கு 'பெரியார்' என்ற பட்டத்தை கொடுத்து கெளரவித்தவர். ஈ.வெ.ரா.இராமசாமி என்பதைவிட, 'பெரியார்' என்றாலே பலருக்கும் தெரியும் அளவுக்கு இன்று 'பெரியார்' என்ற பெயரே நிலைத்துப் போனதற்கும் காரணமாக இருந்தவர் தோழர் மீனாம்பாள். 


இவருக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. மாமேதை அம்பேத்கர் மீனாம்பாளை தனது 'சகோதரி' என்று பெருமிதம் கொள்ளுமளவு தோழர் மீனாம்பாளின் சமூக/அரசியல் களப்பணிகள் இருந்தன. பன்முன மொழிப்புலமையும் சிறந்த படிப்பாளியுமான தோழர் மீனாம்பாளின் வரலாறுகளை ஒருமுறை புரட்டி பாருங்கள் தமிழர்களே...

தமிழ் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னோடியாக இருப்பார் தோழர் மீனாம்பாம்பாள்!

No comments:

Post a Comment