சூத்திரன்
பார்ப்பானைக் கடவுளாகக் கொண்டு தவம் செய்யாமல் கடவுளை நினைத்துத் தவம் செய்வதற்காக,
ராமன் சம்புகன் என்ற சூத்திரனைச் சித்திரவதை
செய்து கொன்றான். அதாவது சூத்திரனுக்கு (திராவிடனுக்கு) கடவுள் பார்ப்பான்தான். பார்ப்பானைக் கடவுளாகக் கொண்டு வணங்காதவனைப் பார்ப்பான்
அரசன் கொல்ல வேண்டும். இது இராமயண தர்மம் மாத்திரமல்லாமல் மனுதர்மமுமாகும். எனவே
இராமாயணம் இருக்க வேண்டுமா?
**************
பிராமணன்,
சத்திரியன், வைசியன், சூத்திரன் ஆகிய நான்கு ஜாதிகளை நான் படைத்தேன் என்றும், பிராமணனுக்குச் சூத்திரன் அடிமைப்பணி செய்ய வேண்டும்; செய்யாவிட்டால் நரகத்தில் புக வேண்டும் என்பதாகவும் பாரதத்தில்
(கீதையில்) கிருஷ்ணன் சொல்லி இருக்கிறான். எனவே பாரதம் இருக்க வேண்டுமா?
**************
சூத்திரன் என்பவன் தாசி புத்திரன், பார்ப்பானின்
வைப்பாட்டி மகன். இதுதான் மனுதர்மம்; மனுதர்மமாத்திரமல்ல, இந்து லாவும் இப்படித்தான் சொல்லுகிறது.
No comments:
Post a Comment