Tuesday, August 28, 2012

வீரத்தமிழிச்சி செங்கொடியின் 1ம் ஆண்டு நினைவு நாள்.

சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் உயிர்காக்க
 தன்னுயிரை ஈகம் செய்த “வீரத்தமிழிச்சி” செங்கொடியின் 1ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாவு ஒறுப்பு அளிக்கப்பட்ட சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் உயிர்காக்க தன்னுயிரை ஈகம் செய்த “வீரத்தமிழிச்சி” செங்கொடி.
சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் சாவு ஒறுப்பை நிறைவேற்ற இந்திய அரசு முயன்றவேளை அம்மூவரையும் காப்பாற்றும் நோக்குடன் 28.08.2011 அன்று காஞ்சிபுரம் தாலுகா பணிமனையின் முன்பு தன்னுடலில் தீமூட்டி வீரத்தமிழிச்சி செங்கொடி ஈகைச்சாவடைந்தார்.

 

தமிழர்களுக்காய் உன்னை எரித்தாய்.தமிழகத்திலிருந்து தொப்புள்கொடி உறவுகளுக்காய் உன்னை கருக்கினாய். வீரமறத்தியே உன்னை தமிழீழ தேசம் ஒருநாளும் மறவாது.
தன்இன உறவுகள் மூவரின் உயிர்காக்க தன்னுயிரை ஆகுதியாக்கிய இந்த வீரத்தமிழிச்சியை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூரும் அதேவேளை இன்றைய நாளில் தாய்மண்ணுக்காய் தங்களை கொடையாக்கிய எங்கள் மாவீரா்களுக்கும் வீரணக்கம் செலுத்துவோம்.

 

No comments:

Post a Comment