Tuesday, August 28, 2012

வீரத்தமிழிச்சி செங்கொடியின் 1ம் ஆண்டு நினைவு நாள்.

சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் உயிர்காக்க
 தன்னுயிரை ஈகம் செய்த “வீரத்தமிழிச்சி” செங்கொடியின் 1ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாவு ஒறுப்பு அளிக்கப்பட்ட சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் உயிர்காக்க தன்னுயிரை ஈகம் செய்த “வீரத்தமிழிச்சி” செங்கொடி.
சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் சாவு ஒறுப்பை நிறைவேற்ற இந்திய அரசு முயன்றவேளை அம்மூவரையும் காப்பாற்றும் நோக்குடன் 28.08.2011 அன்று காஞ்சிபுரம் தாலுகா பணிமனையின் முன்பு தன்னுடலில் தீமூட்டி வீரத்தமிழிச்சி செங்கொடி ஈகைச்சாவடைந்தார்.

 

தமிழர்களுக்காய் உன்னை எரித்தாய்.தமிழகத்திலிருந்து தொப்புள்கொடி உறவுகளுக்காய் உன்னை கருக்கினாய். வீரமறத்தியே உன்னை தமிழீழ தேசம் ஒருநாளும் மறவாது.
தன்இன உறவுகள் மூவரின் உயிர்காக்க தன்னுயிரை ஆகுதியாக்கிய இந்த வீரத்தமிழிச்சியை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூரும் அதேவேளை இன்றைய நாளில் தாய்மண்ணுக்காய் தங்களை கொடையாக்கிய எங்கள் மாவீரா்களுக்கும் வீரணக்கம் செலுத்துவோம்.

 

Monday, August 27, 2012

கவுதம புத்தர் ஒரு நாத்திகர்


உலகில் தோன்றிய சிந்தனையாளர்கள் வரி சையில் புத்தர் சிறப்பிடம் வகிக்கிறார். இன்று தமிழினத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் நாத்திகக் கருத்துகளுக்கு எவ்வாறு புத்தர் கொள்கைகள் முன்னோடியாக திகழ்ந்தது என்பன பற்றி அறிய போதி மாதவன் சரித்திரம் என்னும் நூல் உதவும். அதில் புத்தரின் அறிவுரைகளை அப்படியே வெளியிட்டுள்ளனர்.
கடவுள் மறுப்பு
தெய்வங்களை நினைத்து இரங்கி ஏங்குவதில் பயனில்லை. பிரம்மனே இவ்வுலகை படைத்தான் எனில், இதை ஏன் இவ்வளவு துயரத்தில் ஆழ்த்தி வைக்க வேண்டும். (பக்கம் 73)
புனிதம்
தண்ணீரைத் தெளித்து விட்டு இது புனிதத்தலம் என்று கூறுவதால் ஓர் இடம் புனிதமாகி விடாது. புனிதத்தன்மை இதயத்தைப் பற்றிய உணர்ச்சி யேயாகும். தண்ணீரால் பாவத்தை கழுவ இயலாது (பக்கம் 108)
மனிதன் மயக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் மீன் புலால் முதலிய உணவுகளை விலக்குவதாலோ அம்மணமாக அலைவதாலோ, தலையை மழிப்பதாலோ, அக்கினிக்கு ஆகுதிகள் செய்வதாலோ அவன் பரிசுத்தமாகி விடமுடியாது.
ஆன்மா மறுப்பு
உடல் ஆன்மாவற்றது. பிக்குகளே; உடலே ஆன்மாவாயிருந்தால் இந்த உடல் நோய்க்கு உட்படாது. (பக்கம் 186)
உடலின் தோற்றத்தின் போது உள்ளே புகுந்து கொண்டு, அது மடியும் போது வெளியேறும் ஆன்மா ஒன்று இல்லையென்று அவர் (புத்தர்) மறுத்துள்ளார் (பக்கம் 188)
சுவர்க்கம் - நரகம்
நீருள் நின்று தவம் புரிவதால் சுவர்க்கம் கிடைக்கும் என்றால் மீன்களே முதலில் சுவர்க்கத்திற்கு உரியவை (பக்கம் 108)
பலியிடும் உயிர் உடனே சுவர்க்கம் செல்வதானால், ஒருவன் முதலில் தன் தந்தையையே பலியாக்கி அனுப்பி விடலாமே (பக்கம் 125)
பிரார்த்தனை
பிரார்த்தனை செய்து என்ன பயன்? இது வெளுத்துவிடாது. தெய்வங்களை வேண்டி உயிர்ப் பலி இடவேண்டாம். பண்டம் பழங்கள் வைத்து பூஜை செய்து பலனை எதிர்பார்த்து இருக்க வேண்டாம். (பக்கம் 233)
பொது உடைமை
செல்வர்களுடைய வானளாவிய மாளிகைதான் துயரத்தின் இருப்பிடம்

Sunday, August 26, 2012

இந்து திருமணம் மற்றும் திதி மந்திரமும் அதன் பொருளும்

இந்து திருமண  மந்திரம்:

ஸோம ப்ரதமோ விவித கந்தர்வ விவிவத உத்தர!
த்ருதியோ அக்னிஷ்டே பதி துரியஸ்தே மநுஷ்ஐயா!!
ஸோமோ ததத் கந்தர்வாய
கந்தர்வோ ததத் அக்னயே!
ரயிம்ச புக்ராம் சாசாத் அக்னிர் மஹ்யம்
அதோ இமாம்


பொருள்: அதாவது மணப்பெண்ணை சோமன் முதலில் மனைவியாக அடைந்தான். பிறகு கந்தர்வன் அடைந்தான். இவளுடைய மூன்றாவது கணவன் அக்னி, நான்காவது கணவன் மனித சாதியில் பிறந்தவன்.
சோமன் உன்னை (மணப்பெண்ணை) கந்தர்வனுக்குக் கொடுத்தான். கந்தர்வன் அக்னிக்குக் கொடுத்தான். அக்னிதேவன் இவளுக்குச் செல்வத்தையும் குழந்தையையும் கொடுத்த பிறகு எனக்குத் தந்தான்.... என்பதே புரோகிதர் கூற அதை திருப்பி மணமகன் கூறும் மந்திரத்தின் பொருள்.
இம்மந்திரத்தின் வெளிப்படையான அர்த்தம் என்ன? இந்து மதப்படி திருமணம் செய்து கொள்கின்ற ஒருவரின் மனைவி பலரால் அனுபவிக்கப்பட்ட ஒரு பரத்தை (விபச்சாரி) என்றும், இந்த பெண் (மணப்பெண்) வேறொருவனிடம் குழந்தை பெற்றுக் கொண்டே அவனுக்கு மனைவியாகிறாள் என்றும் இந்து மதம் கூறுகின்றது.
ஆதாரம்: காஞ்சி சங்கராச்சாரியார் எழுதிய தெய்வத்தின் குரல் - பாகம் 2 - பக்கம் 874
எனவே இந்துமதப்படி திருமணம் செய்துக் கொண்டால் உன் மனைவி ஒரு விபச்சாரி என்று பொருள்.


திதி மந்திரம் :

என்மே மாதா ப்ரலுலோபசரதி
அன்னவ் வ்ரதா தன்மே ரேதஹா
பிதா வ்ருந்த்தாம் ஆபுரண்யஹா அவபத்யநாம...


பொருள்: நான் யாருக்குப் பிறந்தேன். என் அப்பா யாரென தெரியாது. மற்றவர்கள் சொல்வதால் நான் இன்னாருக்குத்தான் பிறந்தேன் என்பதை நம்ப வேண்டியுள்ளது. அது அம்மாவுக்குத்தான் தெரியும். அப்படிப்பட்ட அம்மாவுக்கு என் அஞ்சலியை கொண்டு போய் சேர்ப்பீர் என்பது இதன் பொருள்.
இம்மந்திரத்தின் வெளிப்படையான அர்த்தமென்ன?
தன் தாயானவள் சந்தேகத்திற்கு உரியவள். தன் கணவனுக்கு உண்மையாக நடக்காதவள். மாற்றானிடம் உடல் தொடர்பு வைத்திருந்தவள் என்ற அடிப்படையில் இந்த மந்திரம் சொல்லப் படுகின்றது. இதைத்தான் மந்திரம் ஓதும் புரோகிதர் சொல்ல திதி கொடுக்கும் மகன் திருப்பி சொல்கின்றான்.
ஆதாரம்: அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாசாரியார் எழுதிய இந்து மதம் எங்கே போகிறது...
பாகம் -1 - பக்கம் 157, நக்கீரன் வெளியீடு.
எனவே இந்துமதப்படி பெற்றோர்களுக்கு நீ திதி கொடுத்தால் உன் தாய் ஒரு விபச்சாரி என்று பொருள். இதைத்தான் இந்து மதம் கூறுகிறது.