மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற தமிழர் தலைவரை சந்தித்து தி.மு.க. தலைவர் வாழ்த்து
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், நேற்று (11.11.2019) மாலை, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சென்னை அடையாறு, கஸ்தூரிபா நகரில் உள்ள இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து, அவரது
சமூகநீதி மற்றும் சுயமரியாதை குறித்து மக்களிடம் 75 ஆண்டுகளுக்கு மேலாக விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவற்றை அடைவதிலும், தந்தை பெரியார் வழியில் ஆற்றி வரும் மனிதநேயத் தொண்டுகளைப் பாராட்டி, அமெரிக்காவில் 75 ஆண்டுகளாக மனிதநேயத்திற்கு குரல் கொடுக்கிற, அறிவியல் மனப்பான்மை கொண்ட, அறம் சார்ந்த சுயநலமற்ற, பொதுநல நோக்குடைய அமைப்பு அமெரிக்க மனிதநேய சங்கம் (American Humanist Association) சார்பில், அவருக்கு அளிக்கப்பட்ட ‘மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது’ (Humanist Lifetime Achievement Award) பெற்றதற்கு தி.மு.க. சார்பில் பொன்னாடை அணிவித்து, வாழ்த்துகளைத் தெரிவித்தார். ‘அமெரிக்காவில் பெரியார்' என்ற நூலினை தமிழர் தலைவர், தளபதிக்கு வழங்கினார். திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.என்.நேரு, விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான க.பொன்முடி, திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான எ.வ.வேலு ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment