Friday, November 23, 2012

மத்தியப் பல்கலைக் கழகங்கள்


புதுச்சேரியில் மத்திய பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டு 27 ஆண்டுகள் ஓடி விட்டன. என்றாலும் இதைப் பல்கலைக் கழகத்தின் சாதனை என்று சொல்லும்படியாக பெரிதாக எதுவும் இல்லை.

புதுவையையோ, தமிழ் நாட்டையோ, தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட ஒருவர்கூட இதுவரை துணைவேந்தராக வந்ததில்லை. பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் என்று எடுத்துக் கொண்டாலும் பிற மாநில ஆதிக்கம்தான் ஆங்கே கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கிறது.

தமிழர்கள் பெரும்பாலும் வாழக் கூடிய மாநிலத்தில்தான் இந்த பல்கலைக் கழகம் இருக்கிறதா என்று அய்யப்படும் அளவுக்கு வடமாநில ஆதிக்கம்!
நடப்பு அய்ந்தாண்டுத் திட்டத்தில் புதுவைப் பல்கலைக் கழகத்திற்கென்று ரூபாய் 900 கோடி நிதி பெறப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி மற்றும் தமிழ் நாட்டிலிருந்து ஏராளமான விண்ணப்பங்கள் குவிந் துள்ளன.

ஆனால் நிருவாகம் என்ன செய்தது?  கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
2012-2013ஆம் ஆண்டுக்கு முது அறிவியல் பாடத்துக்கு ரூ.14,500 முனைவர் பட்டத்துக்கு ரூ.29,000 என்று கட்டணமாக உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண மக்கள் உள்ளே நுழைய முடியாத அளவுக்குக் கதவு சாத்தப்பட்டு விட்டது.
ஆசிரியர்கள் நியமனம் என்பதெல்லாம் தமிழர் அல்லாதவர்கள் தாம். குறிப்பாக புவி அறிவியல் துறையில் கடைசியாக நியமிக்கப்பட்டவர் தமிழர் 1994 ஆம் ஆண்டுதான். அவருக்குப் பிறகு 18 ஆண்டு காலமாக எந்தத் தமிழரும் நியமனம் செய்யப்படவில்லை.

இந்தக் கால கட்டத்தில் ஆறு முறை தேர்வுக் குழு (Selection Board)  நடைபெற்றுள்ளது. 12 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் பரிதாபம் என்னவென்றால் இந்த12 பேர்களில் ஒருவர்கூட புதுவை மாநிலத்தைச் சேர்ந்தவரோ, தமிழ் மொழி பயின்றவரோ கிடையாது.
மத்தியப் பல்கலைக் கழகம் என்று சொன்னாலே அது ஆரிய ஆதிக்கபுரி என்று சொல்லும் நிலைதான்! இவ்வளவுக்கும் சம்பந்தப்பட்ட மாநில அரசுதான் நிலம், நீர், மின்சாரமெல்லாம் கொடுத்து உதவுகிறது. இவ்வளவு சலுகைகளையும் பெற்றுக் கொண்டு கால் பதித்தவுடன் உள்ளூர் மக்களைப் புறக்கணிக்கும் நிலைதான். இடஒதுக்கீட்டினை முறையாக செயல்படுத் துவதும் கிடையாது.

திருவாரூரில் அப்படிதான் மத்தியப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது. தேவையான நிலத்தை தமிழ்நாடு அரசுதான் அளித்தது. விழாவில் கலந்து கொண்ட முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.

அந்தத் தொடக்க விழாவில் கலந்து கொண்ட மத்திய மனிதவளத் துறை அமைச்சர் கபில்சிபல் விழா முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்தபோது - இடஒதுக்கீடு எல்லாம் அளிக்க முடியாது என்று சொன்னாரே!

திருவாரூரில் அமைந்துள்ள மத்தியப் பல்கலைக் கழகத்தின் பொதுப் பேரவைக்கு (செனட்டுக்கு) நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் 30 பேர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 17 பேர்கள். இந்த 17 பேர்களில் சிலர் யார் யார் தெரியுமா?

1) திரு. சித்தார்த்த வரதராஜன் இந்துப் பத்திரிகை ஆசிரியர்.
2) நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் (ஓய்வு பெற்ற நீதிபதி)
3) திரு. கிருஷ்ணமூர்த்தி (தேர்தல் ஆணையத்தின் முன்னாள் ஆணையர்)
4) செல்வி பத்மா சுப்ரமணியம் (பரத நாட்டியக்காரர்)
இவர்கள் அத்தனைப் பேருமே அசல் அக்கிரகார வாசிகள்தான் என்று சொல்லித் தான் தெரிய வேண்டுமோ!
திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழகத்தில் செயற்குழுவிற்கு (சிண்டி கேட்டிற்கு) 12 பேர் நியமிக்கப் பட்டுள்ளனர்.
அதில் ஒருவர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.
இப்படி பார்ப்பனர் பண்ணையம் கேட்பாரில்லை என்ற போக்குத்தான் தலை விரித்தாடுகிறது.

அதே நேரத்தில் வெளி மாநிலங்களில் உருவாக்கப் படும் மத்தியப் பல்கலைக் கழகங்களின் நிலை என்ன? வெளிமாநிலத்தவர் ஆதிக்கம் அங்கெல்லாம் உண்டா? அப்படியிருந்தால் அம்மாநிலத்தவர் அதனை அனுமதிப் பதும் இல்லை.

ஏமாந்த கோணகிரியாக தமிழர்கள்தான் இருந்து வருகிறார்கள். தமிழ்நாடு அரசும், புதுச்சேரி அரசும் இதில் தலையிட்டு, மத்திய பல்கலைக் கழகங்கள் சம்பந்தப்பட்ட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் படிக்க வழி செய்யப்பட வேண்டும். பணி நியமனங்களிலும் குறிப்பிட்ட  சதவிகிதமாவது அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு அளிக்கப்பட உத்தரவாதம் தேவை! தேவை!!


நன்றி:விடுதலை நாளிதழ்

Friday, November 2, 2012

தமிழர்களும் - தீபாவளியும்



தீபாவளி பண்டிகை என்பது ஆரியர்களின் புராணக் கதைகளில் வரும் ஒரு குட்டிக் கதை. அக்கதையின் கருத்து தேவர்கள் அசுரனைக் கொன்றதாகவும், அக்கொலை யானது உலகத்துக்கு நன்மை பயக்கும் கொலையென்பதும், அதற்கு ஆக மக்கள் அந்தக் கொலை தினத்தைக் கொண்டாட வேண்டும் என்பதுமாகும்.
சாதாரணமாக தீபாவளி என்கின்ற வார்த்தைக்கு விளக்கு வரிசை. அதாவது வரிசையாக விளக்குகள் வைத்தல் என்பது பொருள். இது கார்த்திகை தீபம் என்னும் பெயருள்ள பண்டிகையில் செய்யப்பட்டு வருகிறது. வடநாட்டில் விளக்கு வரிசை வைத்துத் தான் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை தினத்தை நரக சதுர்த்தசி என்றும் சொல்லுவதுண்டு. இதற்குக் காரணம் நரகாசூரன் என்பவன் விஷ்ணுவால் கொலை செய்யப்பட்ட நாள் என்பதாகும். இந்தக் கதை விளக்கம் என்னவென்றால், அது மிகவும் ஆபாசமானது என்றாலும், ஆரியர்களின் இழி நிலைக்கும், தமிழர்களின் முட்டாள்தனத்துக்கும் ஆதாரத்துக்கு ஆக அதையும் ஆரியர் புராணப்படியே சற்று சுருக்கமாக விளக்குவோம்.
அதாவது இரண்யாட்சன் என்னும் ராட்சசன் ஒருவன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு சமுத்திரத்தினடி யில் போய் ஒளிந்து கொண்டானாம்.
மகாவிஷ்ணு என்னும் கடவுள் அவனைச் சமுத்திரத்தில் இருந்து வெளியாக்கிப் பூமியைப் பிடுங்கு வதற்கு ஆக பன்றி உருவமெடுத்து போய் ராட்சசனைப் பிடித்து பாய்போல் சுருட்டப்பட்டிருந்த பூமியைப் பிடுங்கி விரித்து  விட்டாராம்.
அந்த சமயத்தில் அந்த பன்றியைப் பூமாதேவி கலவி செய்ய விரும்பி கலந்தாளாம். அக்கலவியில் ஒரு குழந்தை பிறந்ததாம். அக்குழந்தைக் குத்தான் நரகாசூரன் என்று பெயராம்.  இவன் கசேரு என்பவளை யானை உருவத்துடன் சென்று பலவந்தமாய்ப் பிடித்து வந்து மணம் செய்து கொண் டானாம். மற்றும், இவன் தேவர்களுக்கு இடையூறு செய்து வந்தானாம். தேவர்கள் விஷ்ணுவிடத்தில் முறையிட்டார்களாம்.
விஷ்ணு கிருஷ்ணாவதாரத்தில் நரகாசூரனைக் கொன்றாராம்.
நரகாசூரன், விஷ்ணுவை தனது சாவு நாளை உலகம் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டானாம். அதற்கு ஆக விஷ்ணு அந்தத் தினத்தை உலகம் கொண்டாடும்படி செய்தாராம். இதுதான் தீபாவளியாம். தோழர்களே! ஆரியரின் கதை ஜோடிக்கும் சின்ன புத்தியைப் பாருங்கள். அதை நம்பி விழாக் கொண்டாடும் உங்கள் மடப் புத்தியை  எண்ணி வெட்கப்படுங்கள். ஏனெனில், பூமியை ஒரு ராட்சசன் பாயாக சுருட்டினான் என்றால் அப்போது எங்கிருந்து கொண்டு சுருட்டி இருப்பான்?
சமுத்திரத்திற்குள் போய் ஒளிந்து கொண்டான் என்றால் அப்போது சமுத்திரம் எதன்மேல் இருந்திருக்கும்?
கடவுளுக்குச் சக்தி இருந்தால் பூமியையும், நரகாசூரனையும் வா என்று அழைத்தவுடன் வந்திருக்காதா?
அப்படித் தான் வரவில்லையானாலும் நல்ல ஆகாரம் சாப்பிடும் ஜீவ உருவெடுக் காமல் மலம் சாப்பிடும் ஜீவ உரு எடுப்பானேன்?
அந்த அழகை பார்த்து பூமிதேவி அவனைக் கலவி செய்ய ஆசைப்பட்டா ளென்றால் பூமி தேவியாகிய பாரதத் தாயின் யோக்கியதை எவ்வளவு இழி வானது நம் பாரதத் தாயின் கற்புக்கும், காமத்திற்கும் எதை உதாரணமாகச் சொல்லிக் கொள்ளுவது? அவருடைய புத்திரர்கள் பரிசுத்த ஆவியினுடைய புத்திரர்களைக் காட்டிலும் எவ்வளவு மோசமானவர்களாய் இருந்திருக்க வேண்டும்? பூமாதேவியும் சமுத்திரமும் என்றால் இந்தியாவில் உள்ள இந்துக்களின் பாரத தேவியும் அரபிக் கடலும் வங்காள விரிகுடாக்கடலும் தானா? இதை அந்நியர்கள் கேட்டால் என்ன சொல்லுவார்கள்? நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்?
இப்படிக் கொலை செய்யப்பட்ட நரகாசூரன் என்பவன் நமது தோழர்கள் முத்துரங்கம், ராமநாதன் முதலியவர்கள் போன்றார்களாய் இருந்திருந்தால் தானே கொலை செய்யப்பட்ட அவ மானத்தை உலகம் கொண்டாட வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருப் பான்? இவற்றையெல்லாம் தமிழர்கள் பண்டிதர்கள் முதல் பாமரர்கள் வரை உணர்ந்திருந்தும் தீபாவளி பண்டிகை கொண்டாடினால் ஆரியர்கள் தமிழர் களை, தாசிமக்கள், மடையர்கள், கண் டதைப் புசிப்பவர்கள், புறமுதுகிட்டு ஓடியவர்கள், சண்டையில் சிறை பிடித்த கைதிகள், அடிமைகள் என்றெல்லாம் இன்னும் என்ன என்னமோ சொல்லு வதில் உண்மை இருக்கிறது என்று தானே அர்த்தமாகும்? அப்படித்தானே? அந்நிய மக்கள் நினைப்பார்கள்.
ஆகவே, பாமர மக்களுக்குப் புத்தி இல்லாவிட்டாலும், பார்ப்பன அடிமை களான பல பார்ப்பனரல்லாத காங்கிரஸ் காரர்களுக்குச் சுரணை இல்லாவிட் டாலும், மற்ற தமிழ்ப் பண்டிதர்களும், தங்களை உண்மைத் தமிழ் மக்கள் என்று கருதிக் கொண்டு இருப்பவர்களுமாவது இவற்றை நன்றாய் கவனித்துப் பார்த்து பண்டிகை கொண்டாடாமல் இருந்து மற்ற பாமர மக்களுக்கு வழிகாட்ட வேண்டாமா என்று கேட்கின்றோம்.
இந்தி ஆரிய பாஷை என்றும், ஆரியப் புராணங்களை தமிழர்களுக்கு படிப் பித்து ஆரிய கதைகளைப் புகுத்தி ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்டவே இந் தியைக் கட்டாயமாய் ஆரியர்கள் புகுத்துகிறார்கள் என்றும், சொல்லிக் கொள்ளுவது உண்மையானால் - அதற்கு ஆக தமிழ் மக்கள் அதிருப்தி யும், மனவேதனையும் படுவது உண்மை யானால் - தமிழ் மக்கள் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்ளும் பண்டிதர் கள் தீபாவளி கொண்டாடுவார்களா?
(விடுதலை) குடிஅரசு - கட்டுரை மறுவெளியீடு - 31.10.1937
நன்றி:விடுதலை வலைப்பூ

Monday, October 29, 2012

உடல் நலனுக்கு ஒத்து வராத பழக்கங்கள்

மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள் :

1. காலை உணவைத் தவிர்த்தல்: காலை உணவு சாப்பிடாதவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். இதன் விளைவாக மூளைக்குச் செல்ல வேண்டிய சக்திகள் முழுமையாக சென்றடையாமல் மூளைச் சிதைவு ஏற்படும். எனவே காலை உணவைத் தவிர்க்கும் பழக்கத்தைத் தவிர்த்திடுக.
2. அதிகமாக உண்ணுதல்: வாய் ருசிக்காக அதிகமாகவும் அடிக்கடியும் உணவை உள்ளே தள்ளுகிறவர்கள் உண்டு. இதன் விளைவாக மூளைக்கு சுத்த ரத்தம் செல்லும் குழாய்கள் தடிமனாகி மூளையின் செயல் திறன் குறையும் நிலை உருவாகும். ஆகவே தான் அளவோடு உண்ணுதல் ஆரோக்கியத்தின் தலைவாசலாகிறது.
3. புகைபிடித்தல்: மூளையின் பல பாகங்கள் சுருங்கி இறுதியில் அல்சீமர் நோய் உண்டாகக் காரணமாக அமையும். நுரையீரல் கேடு, நாக்கின் சுவை மொட்டுகள் அழிவு உள்ளிட்ட இதர பல பாதிப்புகள் இலவச இணைப்பு.
4. அதிக சர்க்கரை உண்ணுதல்: அதிக அளவு சர்க்கரை உட்கொண்டால் உணவில் உள்ள மாவுச் சத்தும் மற்ற சத்துகளும் ரத்தத்தில் சேராமல் தடுக்கப்பட்டு சத்துக் குறைபாடு ஏற்படும். அது மூளையின் வளர்ச்சியைப் பாதிக்கும்.
5. காற்று மாசுபடுதல்: நமது உடலில் அதிக அளவு ஆக்ஸிஜன் உட்கொள்ளும் பாகம் மூளையே. மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால் மூளைக்குத் தேவையான ஆக்ஸிஜன் குறைந்து, மூளையின் முனைப்பு குன்றுகிறது.
6. தூக்கமின்மை: தூக்கம் மூளைக்குத் தேவையான நல்ல ஓய்வு. அதிக நேரம் தூக்கமின்மை மூளை அணுக்கள் அழிவதை வேகப்படுத்து கிறது. ஆகவே, அனாவசியமாக அதிக நேரம் தூங்குவது எந்த அளவுக்கு ஆரோக்கியக் கேடோ, அந்த அளவுக்கு உரிய நேரம் உறங்காமல் விடுவதும் கேடுதான்.
7. தலைவரை போர்த்தித் தூங்குவது: தலைவரை போர்த்தி தூங்குவதால், போர்வைக்குள், நம் மூச்சிலிருந்து வெளியாகும் கார்பன்---_டை ஆக்ஸைடு வாயு அடர்த்தி அதிகரித்து, ஆக்ஸிஜனின் அடர்த்தி குறைகிறது. ஆக்ஸிஜன் குறைகிறபோது அது மூளையைத்தான் பாதிக்கிறது. ஆகவே கழுத்து வரையில் போர்த்திக் கொண்டு படுப்பதே நல்லது.
8. உடல் நலிவின்போது மூளைக்கு அதிக வேலை: உடம்பு சரியில்லாதபோது அதிகம் வேலை செய்வது, படிப்பது, எழுதுவது மூளையின் செயல் திறனையும், இறுதியில் மூளையையே பாதிக்கும்.
9. சிந்திப்பதைக் குறைத்துக் கொள்வது: நடத்தல், ஓடுதல், நீந்துதல், விளையாடுதல், பளு தூக்குதல் போன்ற பல உடற்பயிற்சிகளில் ஈடுபடுகிறோம். மூளைக்கு சரியான பயிற்சி சிந்திப்பது தான். மூளையை செயல்படத் தூண்டும் சிந்தனைகள் குறைவது, மூளை சுருங்குவதில் முடியும்.
10. அறிவாகப் பேசுவது: வெட்டிப் பேச்சுகளைத் தவிர்த்து, அறிவு சார்ந்த பேச்சில் ஈடுபடுவது மூளையின் திறனை வளர்க்கப் பயன்படும்.
கல்லீரல் பாதிப்பிற்கான முக்கிய காரணங்கள்:
(1) தாமதமாக உறங்கச் சென்று தாமதமாக விழித்தெழுவது.
2) காலையில் சிறுநீர் கழிக்காமல் இருப்பது.
3) மிக அதிக அளவு உணவு உட்கொள்வது.
4) காலை உணவை சாப்பிடாமல் தவிர்ப்பது.
5) அதிக அளவு மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வது.
6) அதிகப்படியான உணவைப் பாதுகாக்கும் பொருள்களையும், உண வின் நிறமாற்றிகளையும், செயற்கையான இனிப்புகளையும் உண்பது.
7) சுகாதாரமற்ற சமையல் எண்ணெய்யை பயன்படுத்துவது. வறுக்கும்பொழுது ஆலிவ் ஆயில் போன்ற நல்ல சமையல் எண்ணெய் களையும்கூட மிக மிக குறைவாக பயன்படுத்த வேண்டும். களைப்பாக இருக்கும்பொழுது வறுத்த பொருள்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
8) முறுவலான உணவுகளை உண்பது கல்லீரலின் வேலை பளுவை அதிகரிக்கிறது.
9) காய்கறிகளை பச்சையாகவோ அல்லது 3-இல் 5 பாகம் வேக வைத்தும் சாப்பிட வேண்டும். வறுத்த காய்கறிகளை உடனே சாப்பிட்டுவிட வேண்டும். மீண்டும் சாப்பிடலாம் என்று வைத்திருக்கக் கூடாது.
10) அதிகமாக செலவழிக்காமல் மேற்கூறியவைகளை நாம் கடைப்பிடிக்க முடியும். நம்முடைய தினசரி வாழ்க்கை முறையையும் உணவுப் பழக்கத்தையும் சரியாக மாற்றி அமைத்தாலே போதும் நமது உடல் நன்கு செரிமானம் செய்யவும், தேவையற்ற வேதியல் பொருள்களை ஒதுக்கவும், நல்ல உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். சரியான நேரங்களில் சாப்பிடுவதையும் கண்டிப்பாகக் கைக் கொள்ள வேண்டும்.
உடலின் சரியான கால அளவுகள்:
இரவு 9 முதல் 11 மணி வரை: உடல் எதிர் அமைப்பிலிருந்து தேவையற்ற உடலை பாதிக்கக் கூடிய வேதியல் பொருள்களை வெளியேற்றும் நேரம். இந்த நேரத்தை ஓய்வாகவும், இசையை கேட்டும் கழிக்கலாம். வீட்டு வேலைகளை கவனிக்கும் பெண் தொடர்ந்து தட்டுகள் கழுவுவது அல்லது குழந்தைகள் வீட்டுப் பாடம் செய்ய உதவுவது போன்ற வேலைகளை இந்த நேரத்தில் செய்து வந்தால் உடல் நலத்திற்கு அதிக பாதிப்பு ஏற்படும்.
இரவு 11 மணி முதல் 1 மணி வரை:
கல்லீரலில் இருந்து உடலுக்குத் தேவையற்ற வேதியப் பொருட்கள் வெளியேற்றுவதற்கான வேலை நடைபெறும் நேரம். இந்த நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க வேண்டும்.
அதிகாலை 1 மணி முதல் 3 மணி வரை:
உடலை பாதிக்கும் வேதியல் பொருள்களை கணையம் அகற்றும் நேரம். ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க வேண்டும்.
அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை:
தேவையற்ற வேதியல் பொருள்களை நுரையீரல் அகற்றும் நேரம். இருமலால் அவதிப்படுவோருக்கு இந்த நேரத்தில் அதிக இருமல் வர வாய்ப்புள்ளது.
நன்றி: தீக்கதிர் வண்ணக் கதிர்

தீபாவளி கொண்டாடும் தமிழர்களே அசுரன் யார் என்று தெரியுமா?

திராவிடர்கள், வாழ்க்கை வசதிகள், பண்பாடுகள் நிறைந்த நாகரிக இனமாக 
வாழ்ந்து வந்தனர். கைபர், போலன் கண வாய் வழியாக ஆடு, மாடுகளை ஓட்டிக் கொண்டு ஆரியர் கூட்டம் பிழைப்புக்கு வழிதேடி வந்தனர். செழிப்பான திராவிட நாட்டைப் பார்த்து இங்கேயே தங்கி விட்டனர். ஆரியர்கள் யாகம் என்ற பெயரால் சோமபானம், சுரபானம் போன்ற மது வகைகளைக் குடித்தும், ஆடு, மாடு, மான், குதிரை முதலிய விலங்குகளைக் கொன்று தின்றும், காமக்களியாட்டங்களை நடத்தினர். புலால் உண்ணாமை, பண்பாடு, நாகரிகம் நிறைந்த திராவிடர்கள் யாகத்தைத் தடுத்தனர். ஆரியர்கள் திராவிட இனத்தாரில் சிலரை போதைப் பொருள்களையும் தங்கள் இனப் பெண்களையும் கொடுத்து வசப்படுத்த ஆரம்பித்தனர். ஆரிய இனப் பெண்களின் நிறத்தை யும், உடலையும் பார்த்து பலர் அவர் களின் வலையில் வீழ்ந்தனர். அந்த துரோகிகளை இந்திரர்கள் என்று கூறி, அவர்களின் துணை-யுடன், யாக எதிர்ப்பாளர்களைக் கொன்று யாகத்தை நடத்தினர். ஆரியர்கள் கூறிய வேதங்கள் என்பவை, யாக நடப்புகளையும் அவர் களுக்குக் கிடைத்த உதவிகளையும் தெரி விக்கின்றது. வேதங்களையும், கற்பனைக் கடவுள்களையும் சொன்னவர்கள் தேவர்கள் (சுரர்கள்) என்றும், வேதத்தை யும் கடவுள் வணக்கத்தையும் எதிர்த்த வர்கள் அசுரர்கள் என்றும் மதுவையும் சொல்லப்பட்டுள்ளது. ரிக், அதர்வண வேதங்களில் யாகத்தைத் தடுக்கும் அசுரர்-களை அழிக்கும்படி இந்திரன், சோமன், அக்னி என்பவர்களைக் கோரும் மந்திரங்-கள் பலவும் உள்ளன. அவர்களால் கொலை செய்யப்பட்டதாக சாஸன், அகி,  விருத் திரன், சம்பரன், சகவசு, திருபீகன் உரன், சுக்கனன், சுவசன், விபம்சன், பிய்ரு, நமுசி,ருதிக்கிரமன், அதிதிக்கவன், குதச்சணி, ஆபுதி, கிருணகரு என்ற பலம் பொருந்திய அசுரர்களின் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. மேலும் மேற்கண்ட அசுரர்களை அழித்த இந் திரன், சோமன், அக்னி முதலியவர்களை வணங்கி மேலும் அசுரர்களை அழிக் கும்படி வேண்டுகின்றனர். அதில் அசுரர் களின் மணிக்-கட்டை முறி, தோலைக் கிழி, முழங்-கால், முழங்கை, கழுத்துக்ளை முறி, கிழித்தெறி, சின்னா பின்னப்படுத்து, அக்னி சுவாலையால் சுடு, துண்டு துண் டாக வெட்டு, நீர்ப்பானையில் வைத்து வேகவை, பூமி விழுங்கட்டும், படு பாதாளத்தில் விழட்டும், மலை வெடித்து விழுங்கட்டும், நாசமாகட்டும், பசுவின்பால் அவர்களுக்கு நஞ்சாகட்டும், வாரிசு இல்லாமல் அழியட்டும், அவர்களது செல்வம், பசு முதலியவற்றை கொள்ளை-யடித்து எங்களுக்குக் கொடு என்று கேட்-கின்றனர். இவையனைத்தையும், தேவர்கள் குடி மயக்கத்தில்தான் செய்வர். அதனால் அவர்களுக்கு சோமரசத்தை திகட்டும் வரை கொடு என்கின்றனர். பின்னர் கற்பனையான இதிகாசங்களிலும் புராணங்களிலும் இந்த முறையே கடைப்பிடிக்கப்பட்டு திராவிடர்-களை அழித்ததாகக் கூறியுள்ளனர். 

அவற்றில் இரணியாட்சன், நரகாசுரன், கம்ஸன், சிசுபாலன், ஜராசந்தன், ராவணன், கும்பகர்ணன், இந்திரஜித்து, கவந்தன்; பெண்பாலர் தாடகை, சூர்ப்பனகை, சிம்மிகை என்ற திராவி டர்களின் பெயர்கள் வரு-கின்றன. அவர்களுக்கு உதவிய துரோகி-களை ஆழ்வார்கள் என்றுள்ளனர். திராவி டர்கள் பூர்வகுடிகள் என்பதை ரிக்வேதம் 2710 சுலோகத்தில் அசுரகுலத்தை, தாஸ இனத்தை, பழைமையாகவே தொன்று தொட்டு இங்கு வாழ்ந்து வருபவர்களை வேரோடு அழிக்கவும் என்றுள்ளது. திரா-விடர்களை வேதத்தில் அசுரர், அரக்கர், தஸ்யூ, தாஸர், சூத்திரன், தைத்ரியன், யதூ-தனர், பிசாசு, பூதம் என்று குறித்துள் ளனர். ஆயினும் பல இடங்களில் அசுரர் கள் வலிமை மிக்கவர்கள் யோக்கியர்கள் என்றுள்ளது.

அசுரர் என்பது காரணப் பெயரே. சுரன் என்றால் சுரபானம் (மது) அருந் துபவர். அசுரன் என்றால் மது அருந் தாதவர்கள். ஆரியர்கள் தங்கள் வழக்கப்படி நல்லவற்றை கெட்டவை என்றும், நல்லவர்களைக் கெட்டவர்கள் என்று நிலைநிறுத்த மக்களிடம் திரும்பத் திரும்பச் சொல்லி அவை வழக்கத்திற்கே வந்துவிட்டன. இந்த முறையில் மக்களின் மூளைக்கு விலங்-கிட்டும், பல மன்னர்களின் துணையாலும் புத்தர்கள், சமணர்கள் பலரைக் கொன்றும், யாக குண்டங்களில் இட்டுக் கொளுத்தியும், கழுவேற்றியும் அழித்தனர். அசுரர் என்பவர் வலிமை மிக்க, கொல்லாமை விரதம் பூண்ட, நல்லெண்ணம் கொண்ட நாகரிகம் மிக்க திராவிடர்களையே குறிக்கிறது. அது தவறாகக் கொள்ளப்பட்டு, மக்களை நம்பவைத்துள்ளனர். இந்த உண்மையை, தந்தை பெரியார் அவர்கள் மக்களுக்கு எடுத்-துரைத்து, புராண இதிகாசங்களில் சொல்லப்-பட்டு நமது மக்கள் கொண்டாடும் பண்டி-கை-கள் நமது இன முன்னோர்களை அழித்த நாள்களே என்பதால், அவற்றைக் கைவிட்டு மானமும் அறிவும் உள்ள மக்களாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்தப் பண்டிகைகளைக் கொண்டாடும் மக்கள் மானமும் அறிவும் இல்லாமல் தங்-களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்வதாகும். 


நன்றி- விடுதலை நாளிதழ்

Tuesday, August 28, 2012

வீரத்தமிழிச்சி செங்கொடியின் 1ம் ஆண்டு நினைவு நாள்.

சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் உயிர்காக்க
 தன்னுயிரை ஈகம் செய்த “வீரத்தமிழிச்சி” செங்கொடியின் 1ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாவு ஒறுப்பு அளிக்கப்பட்ட சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் உயிர்காக்க தன்னுயிரை ஈகம் செய்த “வீரத்தமிழிச்சி” செங்கொடி.
சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் சாவு ஒறுப்பை நிறைவேற்ற இந்திய அரசு முயன்றவேளை அம்மூவரையும் காப்பாற்றும் நோக்குடன் 28.08.2011 அன்று காஞ்சிபுரம் தாலுகா பணிமனையின் முன்பு தன்னுடலில் தீமூட்டி வீரத்தமிழிச்சி செங்கொடி ஈகைச்சாவடைந்தார்.

 

தமிழர்களுக்காய் உன்னை எரித்தாய்.தமிழகத்திலிருந்து தொப்புள்கொடி உறவுகளுக்காய் உன்னை கருக்கினாய். வீரமறத்தியே உன்னை தமிழீழ தேசம் ஒருநாளும் மறவாது.
தன்இன உறவுகள் மூவரின் உயிர்காக்க தன்னுயிரை ஆகுதியாக்கிய இந்த வீரத்தமிழிச்சியை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூரும் அதேவேளை இன்றைய நாளில் தாய்மண்ணுக்காய் தங்களை கொடையாக்கிய எங்கள் மாவீரா்களுக்கும் வீரணக்கம் செலுத்துவோம்.

 

Monday, August 27, 2012

கவுதம புத்தர் ஒரு நாத்திகர்


உலகில் தோன்றிய சிந்தனையாளர்கள் வரி சையில் புத்தர் சிறப்பிடம் வகிக்கிறார். இன்று தமிழினத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் நாத்திகக் கருத்துகளுக்கு எவ்வாறு புத்தர் கொள்கைகள் முன்னோடியாக திகழ்ந்தது என்பன பற்றி அறிய போதி மாதவன் சரித்திரம் என்னும் நூல் உதவும். அதில் புத்தரின் அறிவுரைகளை அப்படியே வெளியிட்டுள்ளனர்.
கடவுள் மறுப்பு
தெய்வங்களை நினைத்து இரங்கி ஏங்குவதில் பயனில்லை. பிரம்மனே இவ்வுலகை படைத்தான் எனில், இதை ஏன் இவ்வளவு துயரத்தில் ஆழ்த்தி வைக்க வேண்டும். (பக்கம் 73)
புனிதம்
தண்ணீரைத் தெளித்து விட்டு இது புனிதத்தலம் என்று கூறுவதால் ஓர் இடம் புனிதமாகி விடாது. புனிதத்தன்மை இதயத்தைப் பற்றிய உணர்ச்சி யேயாகும். தண்ணீரால் பாவத்தை கழுவ இயலாது (பக்கம் 108)
மனிதன் மயக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் மீன் புலால் முதலிய உணவுகளை விலக்குவதாலோ அம்மணமாக அலைவதாலோ, தலையை மழிப்பதாலோ, அக்கினிக்கு ஆகுதிகள் செய்வதாலோ அவன் பரிசுத்தமாகி விடமுடியாது.
ஆன்மா மறுப்பு
உடல் ஆன்மாவற்றது. பிக்குகளே; உடலே ஆன்மாவாயிருந்தால் இந்த உடல் நோய்க்கு உட்படாது. (பக்கம் 186)
உடலின் தோற்றத்தின் போது உள்ளே புகுந்து கொண்டு, அது மடியும் போது வெளியேறும் ஆன்மா ஒன்று இல்லையென்று அவர் (புத்தர்) மறுத்துள்ளார் (பக்கம் 188)
சுவர்க்கம் - நரகம்
நீருள் நின்று தவம் புரிவதால் சுவர்க்கம் கிடைக்கும் என்றால் மீன்களே முதலில் சுவர்க்கத்திற்கு உரியவை (பக்கம் 108)
பலியிடும் உயிர் உடனே சுவர்க்கம் செல்வதானால், ஒருவன் முதலில் தன் தந்தையையே பலியாக்கி அனுப்பி விடலாமே (பக்கம் 125)
பிரார்த்தனை
பிரார்த்தனை செய்து என்ன பயன்? இது வெளுத்துவிடாது. தெய்வங்களை வேண்டி உயிர்ப் பலி இடவேண்டாம். பண்டம் பழங்கள் வைத்து பூஜை செய்து பலனை எதிர்பார்த்து இருக்க வேண்டாம். (பக்கம் 233)
பொது உடைமை
செல்வர்களுடைய வானளாவிய மாளிகைதான் துயரத்தின் இருப்பிடம்

Sunday, August 26, 2012

இந்து திருமணம் மற்றும் திதி மந்திரமும் அதன் பொருளும்

இந்து திருமண  மந்திரம்:

ஸோம ப்ரதமோ விவித கந்தர்வ விவிவத உத்தர!
த்ருதியோ அக்னிஷ்டே பதி துரியஸ்தே மநுஷ்ஐயா!!
ஸோமோ ததத் கந்தர்வாய
கந்தர்வோ ததத் அக்னயே!
ரயிம்ச புக்ராம் சாசாத் அக்னிர் மஹ்யம்
அதோ இமாம்


பொருள்: அதாவது மணப்பெண்ணை சோமன் முதலில் மனைவியாக அடைந்தான். பிறகு கந்தர்வன் அடைந்தான். இவளுடைய மூன்றாவது கணவன் அக்னி, நான்காவது கணவன் மனித சாதியில் பிறந்தவன்.
சோமன் உன்னை (மணப்பெண்ணை) கந்தர்வனுக்குக் கொடுத்தான். கந்தர்வன் அக்னிக்குக் கொடுத்தான். அக்னிதேவன் இவளுக்குச் செல்வத்தையும் குழந்தையையும் கொடுத்த பிறகு எனக்குத் தந்தான்.... என்பதே புரோகிதர் கூற அதை திருப்பி மணமகன் கூறும் மந்திரத்தின் பொருள்.
இம்மந்திரத்தின் வெளிப்படையான அர்த்தம் என்ன? இந்து மதப்படி திருமணம் செய்து கொள்கின்ற ஒருவரின் மனைவி பலரால் அனுபவிக்கப்பட்ட ஒரு பரத்தை (விபச்சாரி) என்றும், இந்த பெண் (மணப்பெண்) வேறொருவனிடம் குழந்தை பெற்றுக் கொண்டே அவனுக்கு மனைவியாகிறாள் என்றும் இந்து மதம் கூறுகின்றது.
ஆதாரம்: காஞ்சி சங்கராச்சாரியார் எழுதிய தெய்வத்தின் குரல் - பாகம் 2 - பக்கம் 874
எனவே இந்துமதப்படி திருமணம் செய்துக் கொண்டால் உன் மனைவி ஒரு விபச்சாரி என்று பொருள்.


திதி மந்திரம் :

என்மே மாதா ப்ரலுலோபசரதி
அன்னவ் வ்ரதா தன்மே ரேதஹா
பிதா வ்ருந்த்தாம் ஆபுரண்யஹா அவபத்யநாம...


பொருள்: நான் யாருக்குப் பிறந்தேன். என் அப்பா யாரென தெரியாது. மற்றவர்கள் சொல்வதால் நான் இன்னாருக்குத்தான் பிறந்தேன் என்பதை நம்ப வேண்டியுள்ளது. அது அம்மாவுக்குத்தான் தெரியும். அப்படிப்பட்ட அம்மாவுக்கு என் அஞ்சலியை கொண்டு போய் சேர்ப்பீர் என்பது இதன் பொருள்.
இம்மந்திரத்தின் வெளிப்படையான அர்த்தமென்ன?
தன் தாயானவள் சந்தேகத்திற்கு உரியவள். தன் கணவனுக்கு உண்மையாக நடக்காதவள். மாற்றானிடம் உடல் தொடர்பு வைத்திருந்தவள் என்ற அடிப்படையில் இந்த மந்திரம் சொல்லப் படுகின்றது. இதைத்தான் மந்திரம் ஓதும் புரோகிதர் சொல்ல திதி கொடுக்கும் மகன் திருப்பி சொல்கின்றான்.
ஆதாரம்: அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாசாரியார் எழுதிய இந்து மதம் எங்கே போகிறது...
பாகம் -1 - பக்கம் 157, நக்கீரன் வெளியீடு.
எனவே இந்துமதப்படி பெற்றோர்களுக்கு நீ திதி கொடுத்தால் உன் தாய் ஒரு விபச்சாரி என்று பொருள். இதைத்தான் இந்து மதம் கூறுகிறது.