தலைவர் கலைஞர்
அவர்கள் திரைக்
கதை
வசனம்
எழுதிய
மனோகரா
திரைப்
படத்தில் ஒருகாட்சி. மகன்
மனோ
கரனைக்
கைது
செய்து
மன்னர்
தந்தை
அவைக்குக் கொண்டு
வருவார்கள்.
அப்போது மனோகரனைப் பார்த்து மன்னர்
கேட்பார்.
மனோகரன் பதில்
கூறுவார்
மன்னிக்க வேண்டும் மன்னரே.
அழைத்து வரவில்லை. இழுத்து
வந்திருக்கிறீர்கள் என்று.
அதுபோல் போகும்
ஊரில்
எல்லாம் கூட்டத்தைக் கூட்டி
வந்து
காட்டி,
அந்தந்த ஊர்
தொப்பியை அணிந்து கொண்டு
- ஆம்!
மலைப்பகுதியில் மலைப்பகுதி மக்கள்
அணியும் குல்லா,
பஞ்சாபில் சீக்கியர் அணியும் தலைப்
பாகை,
இராஜஸ்தானில் இராஜஸ்தானிய மக்கள்
சுற்றும் தலைத்துணி அணிந்து காட்சி
அளித்துப் பாரீர்!
பாரீர்!
என்று
மோடி
அலை
வீசுவதாகப் போட்ட
ஆட்டம்
ஓய்ந்து விட்டது இப்போது தேர்தல் அறிவிப்பால்.
அதற்கு முன்
குஜராத்தில் பாலாறு,
தேனாறு
ஓடுகிறது. இந்தியாவில் முதன்மை மாநிலம் குஜராத் - குஜராத்தில் அப்படி
முன்னேற்றம், இப்படி
முன்
னேற்றம் என்று
கனைத்ததெல்லாம் பொய்யுரைத்தவையெல்லாம் புள்ளி
விவரங்களால், உண்மை
நிலவரம் வெளிச்சத்துக்கு வந்ததால் அவை
பொய்,
கனவு,
பழங்கதை என்று
ஆகிப்
போனதையும் பார்த்தோம்.
அடுத்து இந்தியா முழுவதும் வீசுவது பா.ஜ.க.அலை.
பா.ஜ.க விலேயே
மோடியை
ஏற்றுக்கொண்டு விட்டார்கள். உள்
கட்சியினர் ராஜ்நாத்சிங், சுஸ்மா
சிவராஜ், எல்.கே.அத்வானி ஆகிய
எல்லோரும் கொண்டுள்ள அதிருப்தி வெளியாகி உள்ளது.
வெட்கக்கேடான அவர்களின் உள்விவகாரம் வெளிச்சத் திற்கு
வந்துள்ளது.
இதில் வேடிக்கை என்னவென்றால் குஜராத்தின் முதல்வர், குஜராத்தை குளிரச்செய்து வருபவர் என்றெல்லாம் பகட்டாகப் பேசிய
மோடிக்குக் குஜராத் தில்
மட்டுமல்ல. வேறு
வட
மாநிலத்தில் கூட
வேட்பாளராகப் போட்டியிடத் தொகுதியே கிடைக்கவில்லை. ஏன்
எனில்
வெற்றி
வாய்ப்புள்ள ஏற்கெனவே வெற்றி
பெற்று
வந்தவர்கள் தங்கள்
தொகுதியை மோடிக்கு விட்டுத்தரத் தயாரில்லை.
எல்.கே.அத்வானி காந்திநகர் தொகுதியில் குஜராத்தில் போட்டியிட்ட காந்தி நகரை அவர்
மோடிக்கு விட்டுக் கொடுக்கத் தயாராக
இல்லை.
ஆகக்
குஜராத்திலேயே தொகுதி
இல்லை.
தனக்கு
இடமில்லாதபோது அவருடைய ஆதரவாளர்கள் குஜராத்திலேயே மோடி
அலை
வீசச்செய்வார்களா? என்பது
கேட்கப்படும் கேள்வி.
அடுத்துக் காஜியாபாத் தொகுதி
- டெல்லிக்கு அருகில் இருப்பது. அதில்
நின்று
வெற்றி
பெற்றவர் தாண்டன் என்
பவர்.
அந்தத்
தொகுதியை அவர்
மோடிக்கு விட்டுக்கொடுக்கத் தயாரா
யில்லை.
உத்தரப்பிரதேசத்தில் வாரணாசி தொகுதி
என்பது
பா.ஜ.க வின்
மூத்த
தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பா.ஜ.க கல்வி
அமைச்சரும், வாரணாசி பல்கலைக் கழகப்
பேராசிரியருமான ஜோஷியின் தொகுதியை மோடி
கண்
வைத்தார்.
மறந்துபோய் சென்னையில் உணவு
விடுதி
விருந்தில் தண்ணீர் என்று
ஆசிட்
டைக்
குடித்து விட்டார் என்று
அப்போல் லோவில்
சேர்க்கப்பெற்றுப் பிழைத்த ஜோஷி
தொகுதியை விட்டுக்கொடுக்க மறுத்து விட்டார். தான்
வெற்றி
பெற்ற
தொகுதி
என்பதால் விட்டுக்கொடுக்க மறுத்துவிட்டார். தான்
வெற்றி
பெற்ற
தொகுதி
என்பதால் விட்டுக்கொடுக்க இயலாது
என்பதை
மழுப்புப் பதிலாகத் தெரிவித்து விட்டார்.
அடுத்து லக்னோ
தொகுதி
இது
ராஜ்நாத்சிங், பா.ஜ.க. வின்
தலைவரின் தொகுதி.
இந்தத்
தொகுதியைக் கண்
வைத்தார் மோடி.
அதுவும் கொடுக்க இயலாது
என்று
அவரும்
சொல்லாமல் சொல்லி
விட்டார்.
அடுத்து மிஞ்சி
இருப்பவர் சுஷ்மா
சுவராஜ். அவர்
சமீபத்தில் பெங்களூர் வந்திருந்த போது
தொகுதி
பறிப்பு விவகாரத்தில் தன்
அதிருப்தியைத் தெரிவித்து வெளியேறி விட்டார்.
ஆக இந்தியா முழுவதுமே பா.ஜ.க. வுக்குள்ளேயே குத்து
வெட்டை
வைத்துக் கொண்டு
மக்களை
ஏமாற்ற
மோடிதான் இந்தியத் தலைமை
அமைச்சர் வேட்
பாளர்
என்று
கூறிவருவது ஒரு
வேடிக்கை.
மராட்டியத்தில் பா.ஜ.க வின்
தொடர்ந்த ஆதரவாளர் கட்சி
பிற
ஊர்
மக்களை,
மண்ணின் மைந்தர் கொள்கை
அடிப்படையில் மராட்டியத்தை விட்டுத் துரத்தப்பல முறை
வன்முறையில் ஈடுபட்ட சிவசேனா கட்சி
தான்.
அந்தக்
கட்சியுடன்தான் எப்போதுமே பால்
தாக்கரே காலத்தில் இருந்து கூட்டு.
இப்போது ராஜ்தாக்கரே எனும்
பால்தாக்கரேயின் மகன்
நவ
நிர்மாண் கட்சி
என்று
புதிய
கட்சியைத் தொடங்கி ஏழு
இடங்களில் போட்டியிடுவதாக அறிவித்துவிட்டதோடு ஏழு
இடங்களில் ஆறு
இடங்களில் சிவசேனாவை எதிர்த் துப்
போட்டியிடப் போவதாக
அறிவித்துத் தோளோடு
தோள்
இணைந்து மோ
டியோடு
நடைபோட்டு வருகிறார். சிவசேனா என்ன
செய்யும் என்பது
வெளிப்படையான உண்மை.
ஏற்கனவே தமிழகத்தில் பா.ஜ.க பூஜ்யம். ஆனால்
பொய்க்கணக்கில் ஏராளமாக வைத்திருக்கிறார்கள் என்பதால் நம்
ஊர்
கேப்டன் கட்சி
பா.ஜ.க வுடன்
கூட்டு
என்று
பேச்சு
வார்த்தை நடத்துகிறார். இவருடைய எதிரியான பா.ம.கவும், பா.ஜ.க வுடன்
கூட்டு
என்று
பேசிப்பத்துத் தொகுதியை அறிவித்து விட்டது. எட்டுத்தொகுதியாவது போட்டி
யிட்டே
தீருவோம் என்கிறார் மருத்துவர். திராவிடப் பாரம்பரை என்று
சொல்லும் வைகோ
இந்த
அணி
என்று
எட்டுத் தொகுதிகளாவது கிடைக்குமா என்று
ஏங்கி
நிற்கிறது கொங்கு
வேளாளர் கட்சி
மோடிதான் பிரதமர் என்று
முழங்கிய தெல்லாம் போய்
வெளியேறும் நிலை.
இந்த நிலையில் வழக்கம் போல்,
இன்னும் இரண்டு
நாள்களில் தொகுதிப் பங்கீடு முடிந்துவிடும் என்று
ஜோசியம் சொல்லிக்கொண்டு இருக்
கிறார்.
அகில
இந்திய
அளவிலேயே பிரச்சினையைத் தீர்க்க இயலாத
பா.ஜ.க. தலைவர்
வந்த
பின்
எல்லாம் முடிந்து விடுமாம்.
இப்படிக் குழப்பமான குழப்பம் உடைய
பா.ஜ.க. தான்
அடுத்து ஆட்சி
அமைக்கும் என்று
மக்களை
ஏமாற்று வதில்
மட்டும் பா.ஜ.கவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவது
என்னவோ
உண்மை.
இந்த நிலையில் அலை
வங்கக்கடலில், அரபிக்கடலில் வீசலாமே தவிர
அது
மோடி
அலையாக
எங்கும் வீசவில்லை. இது
தான்
உண்மை.
முனைவர் பேராசிரியர்
ந.க.மங்களமுருகேசன்
ந.க.மங்களமுருகேசன்