Thursday, August 28, 2014

வீர தமிழச்சி செங்கொடிக்கு வீரவணக்கம் !

வீர தமிழச்சி செங்கொடிக்கு வீரவணக்கம் !

தமிழ் இனத்திற்கு நெருக்கடி எற்படும் போதேல்லாம் இன்னும் எத்தனை முத்து குமார் ,செங்கொடியை தீ -க்கு அளிப்பது ?

இனி ஒரு தமிழ் உயிர் கூட போககூடாது , நம் இலக்கை அடைய!



Friday, August 15, 2014

மரபணு பயிறும் - விளைவுகளும்


மரபணு பயிர் -க்கு மோடி அரசு  அனுமதி அளித்திருக்கிறது!!

முதலில் ஒரு விவசாயின் மகன் என்ற அடிபடையில் எனது  கடுமையாக  கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன்.

ஏதோ இந்த பிரச்சனை விவசாயிகள் சார்ந்தது என்று மக்கள் ஒதுங்கி விட முடியாது , ஏன் என்றால் நீங்கள் தான் நுகர்வோர்கள்.

மரபணு பயிரிடம் விவசாயி தொடங்கி , அதை  உட்கொள்ளும் நுகர்வோர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு வகையான ஒவ்வாமைகளை  எற்படுத்தும்.அதில் சிலவற்றை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன :

பிலிப்பைன்ஸ் தீவுகளில் சிடியோ கல்லாங்க் என்னும் கிராமத்தில் அரசு ஆதரவுடன் பி.டி.மக்காச் சோளம் விதைக்கப்பட்டது. பயிரின் பூக்கும் பருவத்திலேயே அதன் பாதிப்புத் தெரிந்தது. வயலில் வேலை செய்தவர்களுக்கும் அருகில் வசித்தவர்களுக்கும் காய்ச்சலும், முக வீக்கமும், மூச்சு திணறலும், இனம் தெரியாத அழுத்தமும் ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் ரத்தம் பரிசோதிக்கப்பட்டபோது, பி.டி.மரபணு உருவாக்கும் நஞ்சை எதிர்க்கும் ராசாயனங்கள் இரத்தத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதே நிலைமை இந்தியாவில் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் அருகே நிர்மல் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கும் ஏற்பட்டது. அதிக புரதம் தரும் பி.டி. சோயாவை பிரேசில் நாட்டில் உருவாக்கினர். இதனைப் பயன்படுத்தும்போது, வயிற்றுப்போக்கு, அஜீரணம், தோல் அரிப்பு, வலவீனம், தலைவலி போன்ற ஒவ்வாமை உண்டானதால் அவை உடனடியாக திரும்பப் பெறப்பட்டது.

தொடர்ந்து மரபணு மாற்று உணவை உட்கொண்டு வந்தால் சிக்கில் செல் அனீமியா (Sickle cell anemia) என்ற நோய் உருவாகும். இதனால் சிவப்பு அணுக்கள் வடிம் மாற்றம் அடைந்து, சிறிய ரத்தக் குழாய்களுக்குள் நுழைய முடியவில்லை என இங்கிலாந்து ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.

சுற்றுப்புறச் சூழல் மருத்துவத்துக்கான அமெரிக்க கழகம், “மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுகளால் உயிரினங்களின் நோய் எதிர்ப்பு ஆற்றல், இனவிருத்தி செயல்பாடுகள், மன நலம் ஆகியவற்றில் கடும் விளைவுகளை ஏற்படும்” எனக் குறிப்பிட்டு, இப்பயிர்களுக்குத் தடைவிதிக்கக் கோரியிருக்கிறது.

அமெரிக்காவில், பேராசிரியர் பிரைன் டோக்கர், பி.டி. மரபணு தொழில்நுட்பத்தில் விளைந்த உருளைக் கிழங்குகளை உட்கொண்ட எலிகளுக்கு சிறுகுடல் செல்கள் சிதைந்து போயிருப்பதையும், செரிமான உணவுகளை உறிஞ்சும் உறிஞ்சிகள் அழுகிப் போய் இருப்பதையும் தனது ஆராய்ச்சியில் கண்டறிந்தார்.





உலகின் பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் மூலம் பி.டி. மரபணு பயிர்களால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், உடல் நலக் கேடுகள் மட்டுமின்றி, இயற்கையின் உயிர்ச் சூழல் பண்மை அழிந்து, சுற்றுச் சூழலும் அழிந்துவிடும் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டிருக்கின்றன.

இப்படிப்பட்ட அபாயங்களைக் கொண்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை இந்தியாவில் அனுமதிப்பது, நமது பாரம்பரிய, பல்லுயிர்த் தன்மைகளைக் கொண்ட விதைகளை முற்றிலுமாக ஒழித்துக் கட்டும் அபாயத்தைக் கொண்டிருக்கிறது.

எனவே மக்கள் அனைவரும் மரபணு பயிரை அனுமதிக்கும் மத்திய  அரசுக்கு  எதிராக கண்டனங்களை தெரிவிக்க வேண்டும்.

Sunday, April 13, 2014

தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு



தமிழ்ப் புத்தாண்டு என்பது தைப்பொங்கல் என்று கொண்டாடப்படும் தைப்பிறப்பா
அல்லது சித்திரை வருடப்பிறப்பு என்று சொல்கிறோமே அதுவா என்கின்ற மயக்கம்
இன்னும் தமிழ்மக்களிடையே இருக்கிறது. சரியெதுவெனத் தெரிந்த தமிழர்கள்கூட சரியானதைப் பின்பற்றாமல் விடுவதற்குக் காரணம் வழக்கம். அதனை மாற்றுவதா என்கின்ற தயக்கம்.
         
    
இத்தனைக்கும் இது தமிழர்களிடையே தொன்றுதொட்டு இருந்துவந்த வழக்கமல்ல. ஆரியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு இடைக்காலத்தில் நம்மை இறுகப் பற்றிக்கொண்ட எண்ணற்ற மூடநம்பிக்கைகளில் இதுவுமொன்று.
         
சித்திரைப் புத்தாண்டு தமிழர்களின் புத்தாண்டு அல்ல. சித்திரை முதல் நாள் தமிழர்களின் புதுவருடப்பிறப்பு அல்ல. அது இந்துக்களின் புதவருடப்பிறப்பு என்று சொல்லப்படுகின்றது.
சிங்களவர்களுக்கும் சித்திரையில்தான் புதுவருடம் பிறக்கிறதாம். இலங்கை நாட்காட்டிகளில் ஏப்பிரல்ஆம் திகதி இந்து, சிங்கள புதவருடப்பிறப்பு என்றுதான் குறிப்பிடப்படுகின்றது. தமிழர்களின் புதுவருடப்பிறப்பு என்று குறிப்பிடப்படுவதில்லை. அவ்வாறு எங்காவது குறிப்பிடப்பட்டிருந்தால் அது தவறாகும்.
         
சித்திரைப் புத்தாண்டுதான் வருடப்பிறப்பு என்பதற்கு இந்து மதத்தவர்களிடையே நிலவுகின்ற புராணக்கதையையும் நாம் இங்கு நினைவுகூருதல் பொருத்தமாகும்.
         
புராண காலத்தில் நாரதமுனிவருக்குக் காம இச்சை ஏற்பட்டதாம். அந்த இச்சை தாங்கொணாதபடி அதிகமாகவே அதைத் தீர்த்துக்கொள்வதற்காக அவர் கிருஷணரோடு உறவுவைத்துக்கொண்டாராம். அதன் மூலம் அறுபது ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்தாராம். பிரபவமுதல் அட்சய ஈறாக பெயர் சூட்டப்பட்ட அந்த அறுபது குழந்தைகளின் பெயர்களால்தான் ஆண்டுகளின் தொடக்கம் கொண்டாடபபடுகிறதாம்.
           
அபிதான சிந்தாமணி என்ற நூலில் இந்தக்கதை சொல்லப்பட்டுள்ளது. இத்தகைய கேவலமான புராணக்கதையினைப் பின்னணியாக வைத்துத்தான் சித்திரை
வருடப்பிறப்பைக் கொண்டாடுகின்றோமாம். இந்தக்கதை அறிவியலுக்குப் பொருந்துமா?
தமிழ் மரபுக்கு உகந்ததா? தமிழ்ப் பண்புக்குள் அமைந்ததா? நமது குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்க முடியுமா?
         
 உண்மை என்னவென்றால், இந்த ஆண்டுப்பெயர்கள் சாலிவாகனன் என்னும் வடநாட்டு அரசனின் பெயரால் ஏற்படுத்தப்பட்டவை. தமிழ்மக்களுக்கும் இதற்கும் சம்பந்தமே இருந்ததில்லை. மேலும், 60 வருடங்கள் முடிந்ததும் அதாவது அட்சய வருடம் முடிந்ததும் மீண்டும் பிரபவ வருடம் வரும். மீண்டும் 60 வருடங்கள் கழிந்ததும் அட்சய வருடம் வரும். இப்படியே சுற்றிக் கொண்டிருப்பதால் சித்திரைப் புத்தாண்டு முறையால் அறுபது வருடங்களுக்கு மேற்பட்ட காலத்தை வரலாற்று ரீதியாகக் கணக்கிட முடியாது. குறித்துரைக்க இயலாது.
         
உதாரணமாக பிரபவ வருடத்தில் உலகத்தில் வரலாற்றுச் சம்பவம் ஒன்று  நிகழ்ந்தால் அல்லது ஒரு பெரியார் பிறந்ததாகச் சொன்னால் எந்தப் பிரபவ வருடத்தில் அது நடந்ததென்று எப்படிக் கணக்கிட்டு வைக்கமுடியும்? அறுபது வருடங்களுக்கொருதடவை பிரபவ வருடம் வருமே

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்போரலையைப்பற்றி இன்னும் நூற்றி ஐம்பது வருடங்களுக்குப் பிறகு சொல்லும்பொழுது ஆழிப்பேரலை தாரண வருடத்தில் மார்கழி மாதத்தில் தாக்கியது என்றுசொன்னால் எந்தத் தாரண வருடத்தில் என்று தெரியவருமா? எத்தனை வருடங்களுக்கு முன்னர் அந்த அனர்த்தம் நடந்தது என்று கணக்கிட முடியுமா?
ஏனென்றால் இன்றிலிருந்து நூற்றைம்பது வருடங்களுக்குப்பிறகு இரண்டு மூன்று
தாரண வருடங்கள் வந்துவிடும் அல்லவா?
         
இன்னும் ஒரு விடயத்தையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
சித்திரையில் பிறப்பதுதான் தமிழ்ப்புத்தாண்டு என்றால், அதற்கு அடிப்படையாகக் கொள்ளப்படுகின்ற பிரபவ முதல் அட்சய வரை உள்ள அறுபது வருடங்களின் பெயர்கள் எதுவுமே தமிழில் இல்லையே! ஏன் என்ற கேள்வியும்
எழுகிறதல்லவா ? தமிழ்ப் புத்தாண்டுபற்றிய உண்மைநிலையைத் அறிவுபூர்வமாகவும், ஆராய்ச்சியின் அடிப்படையிலும் தமிழ்மக்களுக்கு  உணர்த்துவதற்காக,1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியிலே தமிழ்
அறிஞர்கள், செந்தமிழ்ப் புலவர்கள், தமிழ்க்கடல் நிறைதமிழ் அறிஞர் மறைமலை
அடிகள் அவர்களது தலைமையிலே கூடியிருக்கிறார்கள்.
        
மாபெரும் தமிழறிஞர்களும் கல்விமான்களுமான தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார், தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியம்பிள்ளை,
சைவப்பெரியார் சச்சிதானந்தம்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், நாவலர் .மு. வேங்கடசாமி நாட்டார், முத்தமிழ்க்காவலர் கி..பெ. விசுவநாதம்
ஆகியோர் அந்த அறிஞர் குழவிலே இருந்திருக்கிறார்கள்.
         
அத்தனை அறிஞர் பெருமக்களும் ஒன்றாகக்கூடி தமிழ்ப் புத்தாண்டு பற்றி ஆராய்ந்திருக்கிறார்கள். முடிவுகண்டிருக்கிறார்கள்.600- இற்கும் மேற்பட்ட தமிழ்
அறிஞர்கள் அந்தமுடிவிற்குத் தமது ஏற்பிசைவை வழங்கியிருக்கின்றார்கள்.
அவர்களது முடிவின்படி இயேசுகிறீஸ்து பிறப்பதற்கு 31-ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தவர் திருவள்ளுவர் என்றும், அவரது பெயரில் தொடர்ஆண்டுக் கணக்கீட்டைப்
பின்பற்றுவது என்றும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது

அந்த முடிவுகளின்படி, திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை. இறுதி மாதம்
மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல்நாள் ஆகும். கிழமை நாட்கள் ஏழு.
அவை, ஞாயிறு, திங்கள், செவ்வாய், அறிவன், வியாழன், வெள்ளி, காரி
என்பனவாகும். புதனும், சனியும் தமிழ்ப்பெயர்கள் அல்லவென்பதால் அவற்றுக்கான பண்டைய தமிழ்ப்பெயர்களான அறிவன், காரி என்பன முறையே வழங்கப்படவேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. ஆங்கில ஆண்டுடன் 31-ஐக் கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு. அதுவே தமிழ் ஆண்டுக் கணக்கு.

அறிஞர்களது தீர்மானத்தை அன்றைய தமிழக அரசு அப்படியே ஏற்றுக்கொண்டது.
அதன்படி திருவள்ளுவர் ஆண்டு முறையை 1971-ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு நாட்குறிப்பிலும், பின்னர் 1972-இலிருந்து தமிழக அரசின் திகாரபூர்வமான இதழிலும்,1981இலிருந்து தமிழகத்தின் அனைத்து அரசு அலுவலகங்களிலும் அரசு நடைமுறைப்படுத்தி வருகின்றது. 2009-இல் தமிழக அரசு தைப்பிறப்பையே
தமிழ்ப்புத்தாண்டு என்றும் சித்திரைமாதத்தில் தமிழ்ப்புத்தாண்டு இல்லை
என்றும் சட்டபூர்வமாக ஆணை பிறப்பித்தது.
         
2001-ஆம் ஆண்டு தைமாதம் 6-ஆம் திகதி மலேசியாவிலேதைமுதல்நாளே தமிழ் ஆண்டுத் தொடக்கம்என்று பரப்புரைப் பிரகடனம் வெளியிடப்பட்டது.
     
சித்திரையைப் புத்தாண்டாகக் கொள்ளுகின்ற வழக்கம் பண்டைத் தமிழகத்திலே
இருந்ததொன்றல்ல. தொன்மைமிகு சைவசமயத்தோடு தோன்றியதும் அல்ல.
இடைக்காலத்திலே தமிழர்களிடையே ஏற்பட்டுவிட்ட பழக்கம் அது.
         
சிந்துவெளி மக்கள் தைமுதல் மார்கழி வரையான பன்னிரண்டு மாதங்களையே தமிழ் மாதங்களாகப் பின்பற்றிவந்துள்ளனரென்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் சான்று பகர்ந்துள்ளனர். தை முதல் மார்கழி வரையான பன்னிரண்டு மாதப் பெயர்களும் சுத்தமான தமிழ்ப் பெயர்கள் என்பதுடன், தொல்காப்பியர் காலத்திலேயே அவை வழக்கத்திலிருந்தன என்று கூறுகின்றார் மொழியறிஞர் சி. இலக்குவனார் அவர்கள்.
தைமுதல்நாள் தமிழர் திருநாள் மட்டுமல்ல, அதுவே தமிழ்ப்புத்தாண்டின் தொடக்க நாளுமாகும். தமிழ் ஆண்டாகிய திருவள்ளுவர் ஆண்டை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார் மூதறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்கள்.
         
யேசு கிறீஸ்துவின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு கி.மு என்றும் கி.பி.
என்றும் உலக வரலாறு வரையறுக்கப்பட்டு வருகின்றது. அதேபோலப் புத்தரின்
வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு புத்த சமயத்தினர் புத்த ஆண்டு என்று
கணித்துப் பின்பற்றுகின்றார்கள். இவற்றுக்கெல்லாம் எத்தனையோ ஆயிரம்
வருடங்களுக்கு முற்பட்ட தமிழ்ப் புத்தாண்டு வழக்கத்தை இடையிலே
கைவிட்டுவிட்டு எதையெதையோவெல்லாம் தமிழர்கள் பின்பற்றுவது எவ்வளவு  துர்ப்பாக்கியமானது.
 
தைமாதத்தைத் தமிழ்ப்புத்தாண்டு என்று கொண்டாடினால் கிரக மாற்றங்களில் குளறுபடி ஏற்படுமாம் பஞ்சாங்கக் கணிப்புத் தவறாகிவிடுமாம் என்றெல்லாம் சிலர் மக்களைக் குழப்புகின்றார்கள். இது என்ன பேதைமை! சித்திரையை அடிப்படையாக வைத்துத்தான் கிரக சஞ்சாரங்கள் நடைபெறுகின்றன என்றால் அவை அப்படியே நடக்கட்டும். அவற்றுக்கு அமைவாக எழுதப்பட்ட பஞ்சாங்கங்கள் அப்படியே இருக்கட்டும். சித்திரை மாதக் கிரக நிலையைத் தைமாதத்திற்கு நகர்த்தும்படி யாரும் கூறவில்லை. பஞ்சாங்கங்களைத் திருத்தும்படி யாரும் சொல்லவில்லை. அதற்கு அவசியமும் இல்லை. ஆனால்  சித்திரை மாதம் என்பது தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் அல்ல. தைமாதமே தமிழ்ப்பத்தாண்டின் முதல் மாதம் என்றும், தைமுதல் திகதியே தமிழ்ப்  புத்தாண்டின் முதல்திகதி என்றும் கொண்டாடுவோம். அவ்வாறு நாம் கொண்டாடுவதால் கிரகமாற்றங்களில் கோளாறு ஏற்படும் என்பதும், பஞ்சாங்கம் பொய்த்துவிடும் என்பதும் இந்துத்துவத் திமிர்பிடித்த மூடநம்பிக்கைகள். மடத்தனமான விதண்டா வாதங்கள். மக்களைக் குழப்பும் முயற்சிகள்.
         
தையே முதற்றிங்கள் தைம்முதலே ஆண்டுமுதல்
பத்தன்று, நூறன்று, பன்னூறன்று
பல்லாயிரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தைம்முதல்நாள், பொங்கல் நன்னாள்           
என்று தைத்திங்கள் திருநாளை, தமிழினத்தின் திருநாளாக, தமிழ் வருடத்தின்
முதல்நாளாக, தமிழ்ப பண்பாட்டின் பெருநாளாக போற்றிப் பாடுகின்றார் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் அம்மொழியே பொன்
மொழியாகட்டும். அனைத்துலகத் தமிழர்களுக்கும் ஒரே வழியாகட்டும்.
         
எனவே தைமுதல் நாளையே தமிழ்ப்புத்தாண்டெனக்கொண்டாடும் நமது பண்டைய
வழக்கத்தினை உலகத் தமிழ்மக்கள் அனைவரும் வழக்கப்படுத்திக்கொள்ளவேண்டும்.
வாழ்வில் கடைப்பிடிக்கவேண்டும்.
         
தைப்பொங்கல் பண்டிகை தமிழரின் பண்டிகை தைப்பிறப்பே தமிழ்ப் புத்தாண்டின் பிறப்பு தை முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டின் முதல் நாள்
வாழ்க தமிழ் வணக்கம்!!!