Monday, April 22, 2013

தந்தை பெரியார் சிந்தனைகள் -100 பகுதி -III



67. பூணூல் போட்டதின் கருத்து இன்ன இன்னார் தான் படிக்கத் தகுந்தவர்கள் என்பதை காட்டுவதற்காகவும்சூத்திரன்இன்னான் என்று கண்டு பிடிப்பதற்கு ஆகவும் தான். அதனால் தான் மேலே வேஷ்டி போடுவது கூட மரியாதைக் குறை வென்று செய்யப்பட்டிருக்கிறது.

68.
பார்ப்பனர்களைத் தவிர மற்றைய பெரும்பாலும் தொழிலாளிகளே பூணூல் போட்டுக் கொண்டிருப்பதின் காரணம் அக்காலத்தில் தொழிலாளிகளுக்கு ஏற்பட்ட ஒரு வித சுயமரியாதை உணர்ச்சியேயாகும்.

69.
பார்பார்கள் எவன் பெண்ணுக்கோ பொட்டுக் கட்டி சிங்காரித்து கோவிலில் நிறுத்தி ஆள்களைத் தருவித்து கொள்ளை அடிக்கிறார்கள். இந்த வழக்கத்தை நிறுத்த வேண்டுமென்றால் இந்து மதம் கெட்டுப் போகுமாம்.

70.
இரண்டாயிரம் வருஷமாக இந்திய மக்களுக்கு இருக்கும் இழிவை யும் அவமானத்தையும் விட உப்புச் சட்டம் அவமானம் என்று ஒரு தேசிய வாதி சொல்வதானது உண்மை அவமானத்தை மறைப்பதற்கு செய்யும் சூக்ஷியேயாகும்.

71.
உப்புச் சட்டம் தேசத்திற்கு பெரிய அவமானம் என்று திரு மாளவியா இப்போது சொல்லுகிறார்.

ஆனால் சூத்திரப் பட்டம் தேசத்திற்கு பெரிய கவுரவமா என்று அவரை வணக்கமாகக் கேட்கின்றோம்.

இந்த நாட்டில் ஒருசூத்திரன்உப்பு சத்தியாக்கிரகம் செய்வதைப் போன்ற சுயமரியாதை அற்ற தன்மை வேறு ஒன்றுமே இல்லை யென்று உறுதியாகச் சொல்லுவேன்.

72.
பார்ப்பனர்களுக்கு அடிமையாய் இருக்கும் அரசர்கள்மகா விஷ்ணுவின் அவதாரமாவார்கள்”. “சூத்திரர்களுக்கும்” “பறையர்களுக்குஅனுகூலமாயிருக்கும் அரசர்கள் இராக்ஷதர்கள், நீச்சர்கள், கெடுங்கோன்மை காரர்கள், அன்னியர்கள் ஆவார்கள். இதுதான் பார்ப்பன தர்மம்.

73.
சீதையின் கற்பு விஷயத்தைப் பற்றி நான் என்ன சொல்லுகிறேன் என்பதைக் கவனிக்காதீர்கள். அந்தம்மாளுடன் நெருங்கிப் பழகிய புருஷனாகியதிரிகாலக்கியானி சாக்ஷாத் ஸ்ரீராம பிரானேஎன்ன சொல்லி இருக்கிறார் என்பதைத் தேடிப் பாருங்கள்.

74.
ஒருவருடைய எவ்வித அபிப்பிராயத்தையும் மறுப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால் அதை வெளியிடக் கூடாது என்று சொல்வதற்கு எவருக்கும் உரிமை கிடையாது.

----------------
.வெ.ரா. -- "குடி அரசு" - பொன்மொழிகள் - 13.04.1930
 
75.எந்த மதத்தில் இருப்பதினால் ஒரு மனிதன் தீண்டப்படாதவனாய் கருதப் படுகின்றானோ அவன் தனக்கு ஒரு சிறிதாவது சுயமரியாதை உணர்ச்சி இருக்குமானால் அவன் தான் எந்த மதத்தைச் சார்ந்தால் உடனே தீண்டப்படாதவனாக கருதப்பட மாட்டானோ அந்த மதத்தை சார வேண்டி யது அவனது முதற்கடமையாகும்.

 

76.ஏதாவது ஒரு குறிப்பிட்ட மதத்தில் இருந்தால்தான்கடவுள் அருளோ” “மோக்ஷமோகிடைக்கும் என்கிற விஷயத்தில் எனக்குச் சிறிதும் ஒப்புதலும் நம்பிக்கையும் கிடையாது. அவ்விரண்டு வார்த்தைகளும் அர்த்தமற்றதும் மோசமும் பரிகாசத்திற்கு இடமானதும் என்பதே எனது அபிப்பிராயம்.

 
77. மனுதர்ம சாஸ்திரத்தையும் அதற்கு ஆதாரமான வேதத்தையும் (மத ஆதாரத்தையும்) ஒரு கடவுள் சிருஷ்டித்திருப்பாரானால் முதலில் அந்தக்கட வுளை ஒழித்து விட்டுத் தான் தாகசாந்தி செய்ய வேண்டும்.

 

78.மனுதர்ம சாஸ்திரத்தையும் அதை ஆதரிக்கும் வேதத்தையும் ஒரு மதம் ஆதாரமாய்க் கொண்டிருக்குமானால் முதலில் அம்மதத்தை அழித்து விட்டுத் தான் மனிதன் வேறுவேலை பார்க்க வேண்டும்.

 

79.இந்து மதம் போய்விடுமே! இந்து மதம் போய்விடுமே!! என்று சொல்லிக் கொண்டும் இந்துமத தர்மங்களை ஒன்று விடாமல் காப்பாற்ற வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டும் வந்தவர்களாலேயே இன்று இந்தியாவில் இந்தியர்களில் மூன்றில் ஒரு பாகத்தினர்கள் வேறு மதத்திற்கு அனுப்பப்பட்டிருக்கின்றார்கள். மதத்தைக் காப்பதற்கு என்றும், மதக் கொள்கைகள் சிறிதும் விட்டுக் கொடுக்க முடியாதென்றும் இதுவரை செய்து வந்த முயற்சிகளும் கிளர்ச்சி களும் எல்லாம் இரண்டொரு வகுப்புக்களுடையவும் சில தனிப்பட்ட நபர்க ளுடையவும் சுயநலத்திற்காகச் செய்யப்பட்ட முயற்சிகளாகவே முடிந்ததல் லாமல், எவ்விதப் பொது நலனும் ஏற்படவேயில்லை.

 

80.
மேல் நாட்டாருக்கு ஒரு மாதிரியும் கீழ் நாட்டாருக்கு ஒரு மாதிரி யுமான சுதந்திரங்கள், வித்தியாசங்கள் இருக்கக்கூடாதுஎன்று சொல்லும் இந்திய தேசிய வாதிகள் தங்கள் நாட்டாருக்குள்ளாகவே பார்ப்பனருக்கு ஒரு மாதிரியும் பார்ப்பனரல்லாதாருக்கு ஒரு மாதிரியும் இடமும் தெருவும் குளமும் ஏன் பிரிக்கின்றார்கள்? பிரித்திருப்பதை ஏன் இன்னமும் சகித்துக் கொண்டி ருக்கிறார்கள்? இது யோக்கியமாகுமா?

 

81.சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவுக்கு இந்து மதத்திற்கு பிரதிநிதி யாய் போகவில்லை. ஆனால் அவர் ஒருவக்கீலாய்போனார்.

 

82.உன்னை க்ஷத்திரியன் என்றோ வைசியன் என்றோ நீ சொல்லிக் கொள்ளும் போது நீ பிராமணன் என்பவனுக்கு கீழ்ப் பட்டவனென்பதை நீயே ஒப்புக் கொண்டவனாகின்றாய்.

 

83.சென்ற வருஷத்திய ரயில்வே கெய்டை பார்த்துக் கொண்டு ரயிலுக்குப் போனால் வண்டி கிடைக்குமா?

 

84.சுயமரியாதையும் சமத்துவமும் விடுதலையும் வேண்டிய இந்தியா வுக்கு இப்போது வேண்டியது சீர்திருத்த வேலை அல்ல; மற்றென்னவென் றால் உறுதியும் தைரியமும் கொண்ட அழிவு வேலையேயாகும்.

 

85.இதுவரை நமது நாட்டில் செய்யப்பட்டு வந்த சீர்திருத்தம் என்பதெல்லாம் பாமர மக்களை படித்தவர்களும் பணக்காரரும் ஏய்ப்பதற்கு கண்டு பிடித்த ஒரு சூட்சியே ஒழிய உண்மை சீர்திருத்தமல்ல.

86.குருட்டு நம்பிக்கையின் பயனாய் ஏற்பட்ட கடவுளிடத்தில் மூட பக்தி யால் ஏற்பட்ட மதத்தின் மூலம் சுயநலக்காரர்களால் வகுக்கப்பட்ட கொள்கை களை வைத்து நமது வாழ்க்கையை நடத்துகின்றோம்.

 

87.குருட்டு நம்பிக்கையையும் மூட பக்தியையும் சீர்திருத்த வேலையினால் ஒழிக்க முடியாது. ஆனால் அவற்றை அழிவு வேலையினால் தான் ஒழிக்கமுடியும். அழிவு வேலை செய்பவர்களுக்கு மகத்தான மன உறுதியும், சிறிதும் சந்தேகமற்ற தெளிவும், பழிப்புக்கும் சாவிற்கும் துணிவும் இருக்க வேண்டும்.

 

88.அழிவு வேலைக்காரர்களுக்கு நிதானமும் சாந்தமும் சகிப்புத்தன்மையும் அவசியம் வேண்டுமென்பதையும்; வெறுப்பும் பிடிவாதமும் கண்டிப்பாய்க் கூடாது என்பதையும் நான் ஒரு போதும் ஒப்புக் கொள்ள மாட்டேன்.

 

89.அன்னியர்கள் நம்மை மதிக்க மாட்டார்களே பழிப்பார்களே எதிர்ப்பு பலமாய்விடுமே நமது செல்வாக்கு குறைந்து போகுமே என்கின்ற பயமும் பலக்குறைவும் உள்ளவர்கள் ஒரு காலமும் சீர்திருத்த வேலைக்கு உதவ மாட்டார்கள்.

 

90.சீர்திருத்தத்திற்கு விரோதமான கட்டுப்பாட்டை உடைத் தெறிவது தான், சீர்திருத்தத்தில் பிரவேசிப்பதற்கு உற்ற பாதையாகும்.

 

91.ராம ராஜியத்தையும், வருணாசிரமத்தையும் ஆதரிக்கும் திரு. காந்தியினால் இந்தியாவுக்கு விடுதலை சம்பாதித்துக் கொடுக்க முடியாது.

-----------
.வெ.ரா. "குடி அரசு" - 02.03.1930

  
92. சுயமரியாதை இயக்கமானது வெறும் நம்பிக்கையை மாத்திரம் அடிப்படையாகக் கொண்ட எந்த மதத்திற்கும் விரோதமானதுதான்.

93.
சுயராஜ்யம் கேட்பதற்குமுன் அது ஏன் நமக்கு இல்லாமல் போய் விட்டது என்பதை அறிந்தாயா? என்றைக்காவது இந்து அல்லது இந்தியன் என்கின்ற முறையில் நீ சுயராஜியத்துடன் வாழ்ந்திருக்கின்றாயா?

94.
ராமராஜ்யமென்றால் அது இந்துக்கள் ராஜ்யமல்ல. கடவுள் ராஜ்யம் என்று திரு. காந்தி இப்போது புரட்டிக் கொண்டார். ஆனாலும் பரவாயில்லை. அது எந்தக் கடவுள்? அந்தக் கடவுளின் ராஜ்ஜிய தர்மம் எது? அன்றியும் அவர்என்னுடைய ராமன் வேறு ராமாயண ராமன் வேறுஎன்கின்றார். சரி யென்றே வைத்துக் கொள்ளுவோம், ஆனால் அந்த இராமனை அவர் எங்கிருந்து கண்டு பிடித்தார். ராமாயணத்திலா அல்லது வருணாச்சிரமத்திலா?

95. “
தீண்டாமை விலகினால் ஒழிய இந்தியா சுயராஜ்யம் பெற முடியாது. பெறுதவற்கும் அருகதை இல்லைஎன்று சொன்ன திரு காந்தியார் இன்று சுயராஜ்யத்திற்கு ஆக உப்புக் காய்ச்சப் போவதின் காரணம் என்ன? தீண்டா மையை விலக்கவா அல்லது அது விலகிவிட்ட தென்று நினைத்தா அல்லது சுயராஜ்யம் பெறவா?

96.
ஒரு மனிதன் தனக்கு மோக்ஷத்தில் இடம் பிடிப்பதற்கு ஆக வெகு பேர்களை நரகத்தில் (துக்கத்தில்) அழுத்துகிறான்.

97.
மாடுகள் தினவெடுத்துக் கொண்டால் உரஞ்சிக் கொள்வதற்கு, தேப்புக்கல் அடித்து நட்டுவைக்கும் இந்து மக்கள் விதவைகளுக்கு என்ன செய்திருக்கின்றார்கள்?

98.
மண மென்பது மணமக்களின் மன மொத்ததேயாகும்.

99.
வருணாசிரமத்தையும் பிறவியில் ஜாதியையும் தகப்பன் வேலை யையே மகன் செய்ய வேண்டுமென்னும் வகுப்பு பிரசாரத்தையும் செய்யும் திரு. காந்தியின் தீண்டாமை விலக்கு பிரசாரத்தை விட அரசாங்கத்தின் மது விலக்குப் பிரசாரம் மோசமானதல்ல.

100.
ஒரு குறிப்பிட்ட பண்டிதனை விபசாரிமகன் என்று ஒரு காவியம் எழுதி அதில் அவனையே தன் தாயின் விபசார வியாபாரத்திற்கு தரகனாய் வைத்து அருமையான கற்பனைகளைக் கொண்டு பாடியிருந்தால் அந்த பண்டிதன் அந்தக் காவியத்தின் இன்பத்திற்கும் பொருள் சுவைக்கும் கற்பனை அலங்காரத்திற்கும் ஆசைப்பட்டு அக்காவியத்தை படிப்பானா காப்பாற்றுவானா? கவிச்சுவைக்காரர்களே பதில் சொல்லுங்கள். கம்பராமா யணம் அதில் சேர்ந்ததா அல்லவா?