1. காலை உணவைத் தவிர்த்தல்: காலை உணவு
சாப்பிடாதவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். இதன் விளைவாக
மூளைக்குச் செல்ல வேண்டிய சக்திகள் முழுமையாக சென்றடையாமல் மூளைச் சிதைவு
ஏற்படும். எனவே காலை உணவைத் தவிர்க்கும் பழக்கத்தைத் தவிர்த்திடுக.
2. அதிகமாக உண்ணுதல்: வாய் ருசிக்காக
அதிகமாகவும் அடிக்கடியும் உணவை உள்ளே தள்ளுகிறவர்கள் உண்டு. இதன் விளைவாக
மூளைக்கு சுத்த ரத்தம் செல்லும் குழாய்கள் தடிமனாகி மூளையின் செயல் திறன்
குறையும் நிலை உருவாகும். ஆகவே தான் அளவோடு உண்ணுதல் ஆரோக்கியத்தின்
தலைவாசலாகிறது.
3. புகைபிடித்தல்: மூளையின் பல பாகங்கள்
சுருங்கி இறுதியில் அல்சீமர் நோய் உண்டாகக் காரணமாக அமையும். நுரையீரல்
கேடு, நாக்கின் சுவை மொட்டுகள் அழிவு உள்ளிட்ட இதர பல பாதிப்புகள் இலவச
இணைப்பு.
4. அதிக சர்க்கரை உண்ணுதல்: அதிக அளவு
சர்க்கரை உட்கொண்டால் உணவில் உள்ள மாவுச் சத்தும் மற்ற சத்துகளும்
ரத்தத்தில் சேராமல் தடுக்கப்பட்டு சத்துக் குறைபாடு ஏற்படும். அது மூளையின்
வளர்ச்சியைப் பாதிக்கும்.
5. காற்று மாசுபடுதல்: நமது உடலில் அதிக
அளவு ஆக்ஸிஜன் உட்கொள்ளும் பாகம் மூளையே. மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால்
மூளைக்குத் தேவையான ஆக்ஸிஜன் குறைந்து, மூளையின் முனைப்பு குன்றுகிறது.
6. தூக்கமின்மை: தூக்கம் மூளைக்குத்
தேவையான நல்ல ஓய்வு. அதிக நேரம் தூக்கமின்மை மூளை அணுக்கள் அழிவதை
வேகப்படுத்து கிறது. ஆகவே, அனாவசியமாக அதிக நேரம் தூங்குவது எந்த அளவுக்கு
ஆரோக்கியக் கேடோ, அந்த அளவுக்கு உரிய நேரம் உறங்காமல் விடுவதும் கேடுதான்.
7. தலைவரை போர்த்தித் தூங்குவது: தலைவரை
போர்த்தி தூங்குவதால், போர்வைக்குள், நம் மூச்சிலிருந்து வெளியாகும்
கார்பன்---_டை ஆக்ஸைடு வாயு அடர்த்தி அதிகரித்து, ஆக்ஸிஜனின் அடர்த்தி
குறைகிறது. ஆக்ஸிஜன் குறைகிறபோது அது மூளையைத்தான் பாதிக்கிறது. ஆகவே
கழுத்து வரையில் போர்த்திக் கொண்டு படுப்பதே நல்லது.
8. உடல் நலிவின்போது மூளைக்கு அதிக வேலை:
உடம்பு சரியில்லாதபோது அதிகம் வேலை செய்வது, படிப்பது, எழுதுவது மூளையின்
செயல் திறனையும், இறுதியில் மூளையையே பாதிக்கும்.
9. சிந்திப்பதைக் குறைத்துக் கொள்வது:
நடத்தல், ஓடுதல், நீந்துதல், விளையாடுதல், பளு தூக்குதல் போன்ற பல
உடற்பயிற்சிகளில் ஈடுபடுகிறோம். மூளைக்கு சரியான பயிற்சி சிந்திப்பது தான்.
மூளையை செயல்படத் தூண்டும் சிந்தனைகள் குறைவது, மூளை சுருங்குவதில்
முடியும்.
10. அறிவாகப் பேசுவது: வெட்டிப் பேச்சுகளைத் தவிர்த்து, அறிவு சார்ந்த பேச்சில் ஈடுபடுவது மூளையின் திறனை வளர்க்கப் பயன்படும்.
கல்லீரல் பாதிப்பிற்கான முக்கிய காரணங்கள்:
(1) தாமதமாக உறங்கச் சென்று தாமதமாக விழித்தெழுவது.
2) காலையில் சிறுநீர் கழிக்காமல் இருப்பது.
3) மிக அதிக அளவு உணவு உட்கொள்வது.
4) காலை உணவை சாப்பிடாமல் தவிர்ப்பது.
5) அதிக அளவு மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வது.
6) அதிகப்படியான உணவைப் பாதுகாக்கும் பொருள்களையும், உண வின் நிறமாற்றிகளையும், செயற்கையான இனிப்புகளையும் உண்பது.
7) சுகாதாரமற்ற சமையல் எண்ணெய்யை
பயன்படுத்துவது. வறுக்கும்பொழுது ஆலிவ் ஆயில் போன்ற நல்ல சமையல் எண்ணெய்
களையும்கூட மிக மிக குறைவாக பயன்படுத்த வேண்டும். களைப்பாக இருக்கும்பொழுது
வறுத்த பொருள்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
8) முறுவலான உணவுகளை உண்பது கல்லீரலின் வேலை பளுவை அதிகரிக்கிறது.
9) காய்கறிகளை பச்சையாகவோ அல்லது 3-இல் 5
பாகம் வேக வைத்தும் சாப்பிட வேண்டும். வறுத்த காய்கறிகளை உடனே
சாப்பிட்டுவிட வேண்டும். மீண்டும் சாப்பிடலாம் என்று வைத்திருக்கக் கூடாது.
10) அதிகமாக செலவழிக்காமல் மேற்கூறியவைகளை
நாம் கடைப்பிடிக்க முடியும். நம்முடைய தினசரி வாழ்க்கை முறையையும் உணவுப்
பழக்கத்தையும் சரியாக மாற்றி அமைத்தாலே போதும் நமது உடல் நன்கு செரிமானம்
செய்யவும், தேவையற்ற வேதியல் பொருள்களை ஒதுக்கவும், நல்ல உணவுப்
பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். சரியான நேரங்களில் சாப்பிடுவதையும்
கண்டிப்பாகக் கைக் கொள்ள வேண்டும்.
உடலின் சரியான கால அளவுகள்:
இரவு 9 முதல் 11 மணி வரை: உடல் எதிர்
அமைப்பிலிருந்து தேவையற்ற உடலை பாதிக்கக் கூடிய வேதியல் பொருள்களை
வெளியேற்றும் நேரம். இந்த நேரத்தை ஓய்வாகவும், இசையை கேட்டும் கழிக்கலாம்.
வீட்டு வேலைகளை கவனிக்கும் பெண் தொடர்ந்து தட்டுகள் கழுவுவது அல்லது
குழந்தைகள் வீட்டுப் பாடம் செய்ய உதவுவது போன்ற வேலைகளை இந்த நேரத்தில்
செய்து வந்தால் உடல் நலத்திற்கு அதிக பாதிப்பு ஏற்படும்.
இரவு 11 மணி முதல் 1 மணி வரை:
கல்லீரலில் இருந்து உடலுக்குத் தேவையற்ற
வேதியப் பொருட்கள் வெளியேற்றுவதற்கான வேலை நடைபெறும் நேரம். இந்த நேரத்தில்
ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க வேண்டும்.
அதிகாலை 1 மணி முதல் 3 மணி வரை:
உடலை பாதிக்கும் வேதியல் பொருள்களை கணையம் அகற்றும் நேரம். ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க வேண்டும்.
அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை:
தேவையற்ற வேதியல் பொருள்களை நுரையீரல் அகற்றும் நேரம். இருமலால் அவதிப்படுவோருக்கு இந்த நேரத்தில் அதிக இருமல் வர வாய்ப்புள்ளது.
நன்றி: தீக்கதிர் வண்ணக் கதிர்